உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

  • மறைமலையம் -6

வித்தாள்; என்னை? அம் மெல்லியலாள் சில அடிகளே எடுத்துவைத்ததுந் தன் அடியில் தருப்பைப் புல்லின் முனைகுத்திற்றென்று சடுதியிலே நின்றுவிட்டாள்; அங்ஙனம் நிற்கையில், முட்செடிகளின் கிளைகளாற் பற்றப்படா திருக்கவுந் மரவுரி யாடை யை அதனினின்றும் விடுவிப்பாள் போல் என்னைத் திரும்பி நோக்கினாள்.

தன்

விதூஷகன் : அப்படியாயின் வழிப்பயணம் போவதற்கு வேண்டும் பொருள்களுடன் முயற்சியாயிரும். தவவொழுக்கம் நிகழும் இக் கானகத்தை இன்பம் நுகர்தற்கேற்ற சோலை யாக்கிவிட்டீர்.

6

ளஞ்

அரசன் : நண்பனே! என்னை இன்னானென்று தவசிகள் சிலர் அறிவர்; எந்த ஏதுவை முன்னிட்டு நாம் திரும்பவுந் துறவாசிரமத்திற் செல்லலா மென்பதைக் கண்டு சொல்.

விதூஷகன் : வேறென்ன சாக்கு வேண்டும்? நீர் தாம் அரசனாயிற்றே.

அரசன் : அதனால் என்னை?

விதூஷகன் : காட்டுத் தானியத்தில் ஆறிலொரு கூறு துறவிகள் செலுத்த வேண்டுமெனப் போய்ச் சொல்லுமே.

அரசன் : ஓ மடவோய்! முழுமணிக் குவியல்களைக் காட்டினும் உயர்த்துப் பேசப்படும் மற்றொருவகைக் கடமை அவர்களைக் காப்பதனால் நமக்கு வருகின்றதே. பல வேறு வகுப்பினரிடமிருந்து பெறப்படுகின்ற அரசிறைப்பொருள் அழிந்துபோவதுந், துறவோர்கள் தாமியற்றுந் தவப் பயனில் ஆறிலொரு கூறாய்க் கொடுக்கும் பொருள் என்றும் அழியாதிருப்பதும் ஆராய்ந்துபார்.

(திரைக்குப் பின்னே)

நன்று! நன்று! நங்கருத்து நிறைவேறியது.

அரசன் : (உற்றுக்கேட்டு) ஆழ்ந்த தமைந்த இக்குரல் ஒலி யினால் வருகின்றவர்கள் துறவிகள் என்பது புலப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/71&oldid=1577129" இலிருந்து மீள்விக்கப்பட்டது