உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

43

அரசன் : இரைவதகா! நான் சொன்னனேன்று தேர்ப் பாகனிடஞ் சொல்லி வில்லுங் கணையும் எடுத்துக் கொண்டு தேரைச் செலுத்திவரச் செய்.

வாயில்காப்போன் : எம்பெருமான் கட்டளைப்படியே.

(போகின்றான்.)

இருவரும் : (மகிழ்ச்சியோடு) நும்முடைய முன்னோரைப் போல் நுமது கடமையைச் செய்வது நுமக்கு நிரம்பவுந் தகுதியே; இடர் உற்றவர்களுக்கு அதனை நீக்கி உதவி வி செய்தலிலேயே புருவின் குடியிற் பிறந்தோர் தம்மைத் தீக்கை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அரசன் : அடிகாள்! நீங்கள் முன்னே செல்லலாம். நானும் தோ உங்கள் பின்னே வருகின்றேன்.

இருவரும் : நுமக்கு வெற்றி சிறக்க! (போய்விடு கின்றார்கள்.)

அரசன் : மாதவிய! உனக்குச் சகுந்தலையைப் பார்க்க ஆவலுண்டா?

விதூஷகன் : முன்னே கேட்டபோது பார்க்கவேண்டு மென்னும் அவர் கரைகடந்து ஒழுகியது; அரக்கர்களைப் பற்றிக் கேட்ட உடன் இப்போது அஃது ஒரு துளிகூட இல்லாமற் போயிற்று.

அரசன் :

ஏடா! ஒன்றுக்கும் அஞ்சாதே; நீ என்

அருகிலேயே இருப்பா யன்றோ?

விதூஷகன்

அப்படியானால்

அரக்கர்களுக்குத் தப்பிப் பிழைத்தேனே?

நான் இங்கே

(வாயில்காப்போன் வருகின்றான்)

வாயில்காப்போன் : தாங்கள் எழுந்தருளுதலை எதிர் பார்த்துக்கொண்டு தேரானது காத்திருக்கிறது. இன்னும் இதோ பட்டினத்திலிருந்து தங்கள் அன்னைப் பெருமாட்டி யாரால் விடுக்கப்பட்ட கரபகன் ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/74&oldid=1577133" இலிருந்து மீள்விக்கப்பட்டது