உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

45

விதூஷகன் : நான் அரக்கர்களுக்கு அஞ்சுகிறேன் என்று எண்ணுகிறீரோ என்ன?

அரசன் : (புன்னகை செய்து) ஓ! பார்ப்பனப் பெரியோய்! இஃது உன்னிடத்தும் நினைக்கற்பாலதா?

விதூஷகன் அப்படியானால் நல்லது; அரசன் தம்பியைப்போல் நான் போவேன்.

அரசன் : இத் துறவாசிரமத்திற்கு எவ்வகையான தொல்லையும் நேராதபடி செய்ய வேண்டுமாதலாற் படைஞர் களெல்லாரையும் உன்னுடனேயே போக்கி விடுகின்றேன்.

விதூஷகன் : (செருக்கோடு) அப்படியானால் நான் இப்போது இளவரசாயினேன்!

L

விழைவு

அரசன் : (தனக்குள்) இந்தப் பயல் பேதைமதியுடையனா யிருக்கின்றான். யான் சகுந்தலைமேல் கொண்டிருத்தலை இவன் ஒருகால் உவளகத்தில் உள்ள மகளிர்க்குச் சொல்லினுஞ் சொல்லுவான். நல்லது இவனுக்கு இங்ஙனஞ் சொல்வேன். (விதூஷகன் கையைப் பிடித்து) நண்பனே! முனிவர்பால் வைத்த வணக்க அன்பின் பொருட் டாகவே யான் ஆசிரமத்திற்குச் செல்கின்றேன்; உண்மையில் எனக்கு அத் துறவி மகளிடத்தில் எவ்வகையான விருப்பமு மில்லை. பார்! நம்முடைய நிலைமை எங்கே ! மான் கன்று களினிடையே வளர்க்கப்பட்டுக் காதல் இன்னதென்றே அறியாத அப் பெண்ணின் நிலைமை எங்கே! நேசனே! நான் பகடியாய்ச் சொன்ன சொற்களை உண்மையாக நினையாதே. நல்லதப்படியே (எல்லாரும் போய்

வி

அப்ப

விதூஷகன் : டுகின்றனர்.)

இரண்டாம் வகுப்பு முற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/76&oldid=1577135" இலிருந்து மீள்விக்கப்பட்டது