48
மறைமலையம் -6
(மனத்தளர்ச்சியோடு சுற்றி நடந்து போகின்றான்.) இன்றைக்குரிய வேள்விச் சடங்குகள் நிறைவேறினமையால் வேட்கும் ஆசிரியர் போகும்படி எனக்கு விடையளித்திருக் கின்றனர்; பேர் உழைப்பினால் இளைப்படைந்திருக்கின்ற யான் எங்கே சென்று பொழுது போக்குவேன்? (நெட்டுயிர்ப் பெறிந்து) என் காதலியைக் காண்பதைவிட எனக்கு வேறு என்ன ஆறுதல்இருக்கின்றது? நல்லது, அவள் ருக்கு மிடத்தை நாடிப்போவேன்.(கதிரவனைப் பார்த்து) வெம்மை மிகுந்த இந் நண்பகற் காலத்தைச் சகுந்தலை தன் தோழிமாரொடு, பச்சிளங்கொடிப் பந்தரால் மூடப்பெற்ற மாலினி யாற்றங் கரையிலேதான் கழிப்பாள். உடனே நான் அங்குச் செல்வேன். (சுற்றிப்போகின்றான் - தென்றற்காற்று மேலே படுதலாற் பிறந்த இன்பத்தைத் தெரிவிக்கின்றான்.) ஆ ஆ! புதுத் தென்றல் எப்போதும் உலாவப் பெறுகின்ற இவ்விடம் எவ்வளவு இனிதாயிருக்கின்றது!
முகைஅவிழ்க்குந் தாமரையின் முதிர்மணத்தின் அளைந்து மிகைபடுநீர் மாலினியின் விரிதிரை நுண் டுளிவீசுந் தகையினிய இளந்தென்றல் தனிக்காம எரிவெதுப்புந்
தொகையுடம்பிற் றழுவுதற்குத் தொலையாத வளமுடைத்தே.
(சுற்றிப்போய்ப் பார்க்கின்றான்.) பிரப்பங்கொடியால் ளைக்கப்பட்ட இப் பச்சிளங்கொடிப் பந்தரிலேதான் சகுந்தலை பெரும்பாலும் இருக்கவேண்டும்; ஏனெனில், இதன்வாயில் முற்றத்தே பரப்பப்பட்டிருக்கும் வெண் மணலில் அவள் தன் இடுப்பின்கீழ்ப் பொறையாற் பின்புறம் ஆழ்ந்தும் முன்புறம் உயர்ந்தும் இப்போதுதான் பதிந்திருக்கின்ற அடிச் சுவடுகள் ஒரு வரிசையாய்க் காணப்படுகின்றன. நல்லது, இக் கிளைகளின் பின்னே யிருந்து பார்க்கின்றேன். (சுற்றிப்போய் அவ்வாறே பார்த்துக் களிப்போடு)
விழிகளாற் பெறூஉம் அழிவில்பே ரின்பம் ஆஅ ! பெரி தெய்தினென் மாதோ, தூஉய ஒண்மலர் தாஅய வெண்ணிறக் கன்மிசைத்