உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 6

அரசன் : (மகிழ்ச்சியோடு) யான் எதனைக் கேட்க வேண்டுமென விழைந்தேனோ அதனையே கேட்டேன்.

வேனில் கழிந்த வுடனே விரிகடல்நீர்

வானம் பருகி வருகார்நாள் மன்னுயிருக் கானா மகிழ்வு தரல்போல் அடுங்காதல்

ஏனை எனக்கும் இன்பம் பயந்ததுவால்.

சகுந்தலை : நல்லது, நான் சொல்லியது உங்களுக்குப் பொருத்தமா யிருந்தால் அவ் அரசமுனிவரின் அருளுக்கு யான் தக்கவளாகும்படி எதுசெய்ய வேண்டுமோ அதனைச் சய்யுங்கள்; இல்லையேல், எனக்கு எள்ளுந் தண்ணீரும் இறைத்து விடுங்கள்.

அரசன் : இச் சொற்கள் என் ஐயமெல்லாம் போக்கின.

ச்

பிரியம்வதை : (அப்புறமாய்) அனசூயே! இவளது காதல்நோய் அளவுடந்து பெருகிவிட்டமையால் இவள் காலந்தாழ்ப்பதைப் பொறுக்கக்கூடாதவளா யிருக்கின்றாள். வள் யார்மேல் தன் மனத்தைப் பதிய வைத்திருக்கின்றாளோ அவர் புருவின் குடிக்கு ஓர் அணிகலம்போற் சிறந்து விளங்குகின்றார்; ஆகையால், இவள்கொண்ட காதல் நம்மால் ஏற்றுக் கொள்ளப்படுவது முறையேயாம்.

அனசூயை : (அப்புறமாய்) ஏடி! நீ சொல்லுகிறபடியே யாகட்டும். (உரக்க) தோழி! நல்வினை வயத்தால் நீ தகுந்த ஓர் இடத்திற் காதல் வைத்தாய். ஒரு பேரியாறு கடலில் அல்லாமல் வேறு எங்கே போய்விழும்?

பிரியம்வதை : குழைமலிந்த மாதவிக் கொடியைத் தேமாமரம் அன்றி வேறு எது தாங்கவல்லது?

அரசன் : விசாகமீன் மூன்றாம் பிறையைப் பின்பற்றிச் சென்றால் அதுவும் ஒரு வியப்பாகுமா?

அனசூயை : நம் தோழியின் எண்ணத்தை விரைவாகவும் மறைவாகவும் நிறைவேற்றுதற்கு யாது வழி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/83&oldid=1577142" இலிருந்து மீள்விக்கப்பட்டது