உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 7.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

249

கடுமையான நோயும் விலகும்படி செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார். கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் மரம் செடி கொடிகளின் பயனான இலை பூ காய் கனி விதை கிழங்கு முலானவை களேயாம். மக்களேயல்லாமல் அசையும் பொருள்களாகிய எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை உணவான அசையாப் பொருள்களாகிய பயிர்பச்சை களேயாம் என்பதை விரிவாக விளக்குகிறார்.

அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்ன முயலுங்கால் மெலியது தனதுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மிகவும் விரைந்தோடித் பாருட்டு,மிகவும் தப்பிப் பிழைப்பதனைக் கண்டு அறிகின்றோம்” என ஒரு சான்று காட்டுகின்றார்.

கிறித்தவ மறையும் மக்களுக்கும் விலங்கு பறவை முதலிய உயிர்களுக்கும் மரம் செடி கொடி புற்பூண்டுகளை இறைவன் அருளியதாகக் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார்.

புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் அசைந்து திரியாவாய் நிற்றலும், அவற்றின் இலை பூ காய் கனி விதை முதலியவற்றை அசைந்து திரியும் உயிரிகள் தின்னவரும் போது அவை அவற்றோடு சண்டையிடக் காணாமையாலும் இயங்கும் உயிரிகளுக்கு இயங்கா உயிரிகள் உணவாகத் தக்கவை என்பதை உணரலாம் என்கிறார்.

ஊன் உணவின்றி, இயங்கும் உயிர்கள் எல்லாமும் வாழலாம். ஆனால் புற்பூண்டுகளும்அவற்றின் பயனும் இன்றிமற்றை எந்த உயிரும் உயிர் வாழல் முடியாது என்பதை விளக்கப்படுத்துகிறார்.

.

ஊன் உண்ணா உயிரிகளின் தூய்மை, வலிமை முதலிய வற்றையும் ஊன் உண்ணும் உயிரிகளின் தூய்மை இன்மை, வன்மை இன்மை முதலியவற்றையும், ஊன் உண்ணாதார் நெடிய வாழ்வு நலவாழ்வு ஆகியவற்றையும் பல்வேறு சான்று களால் விளக்குகின்றார்.

நோயிலா நெடுவாழ்வு : நோயில்லா நீண்ட வாழ்க்கை என்னும் கட்டுரை தனிநூலாம் தன்மையது. (214-332)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/274&oldid=1578404" இலிருந்து மீள்விக்கப்பட்டது