உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335

66

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீஞானஸம்பந்த குருப்யோநம

வாழ்த்து

வாழ்க வந்தணர் வானவ ரானினம்

வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக

ஆழ்க தீயதெ லாமர னாமமே

சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

23. முதற்பதுமம்

ஞானசாகரத்திற் சென்ற தைமாதம் முளைத்தெழுந்த முதற்பதுமம் நிகழும் மார்கழிமாத இறுதிவரையிலும் பன்னிரண்டு இதழ்கள் விரித்துத் திப்பிய ஒளிதிகழ அலராநின்றது. ஞானசாகரத்தைக்கவிந்து வியாபிக்கும் பாமவியோமத்தின்கண்ணே கோடி சூரியப் பிரகாசமுங் குன்ற விளங்குஞ் சிவசூரியநாயகனைக் காண்டலும், கரைகடந்த களிப்புடையளான இப்பதுமநாயகி தன்னகத்தே பொதிந் துளைத்த நிகரில்லாச் சைவமணத்தை யாண்டும் பரப்பிப் பக்குவமுதிர்ச்சி யடைந்து சிவபதப்பேற்றிற்கு உரியரான நல்லன்பர்களென்னும் வண்டினங்களைப்பேரின்ப விருந்து கூட்டுண்ண அழைத்து, அரக்கிதழ்கள்தோறும் அப்பேரின்பத் தேறலைச் சுரந்து ஒழுக்காநின்றனள். மாலைக் காலத்தே தன்நாயகனைப்பிரிந்து வருந்திக்கூம்பும் உலகத்துத் தாமரை போலாது, இப்பதுமநாயகி சிவபெருமானான தன் அருமை நாயகனை ஒழியாது முயங்கித் தன்னைவந்து அணுகும் நல்லன்பர்க்கு நித்தியானந்தத்தை நுகர்வியாநின்றாள்.

இனிஇது சமயசாத்திர தத்துவசாத்திர பௌதிகசாத்திர இலக்கண இலக்கியப்பொருள் நுதலுவது என்றற்கு ஏற்பச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/360&oldid=1574786" இலிருந்து மீள்விக்கப்பட்டது