உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

26. ஆகமம்

ஆகமம் என்பது, பரமாப்தரினின்றும் வந்தது எனப் பொருள்படும். இன்னும், ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால் ஆகமம் என்பதற்குத்திரிபதார்த்த லக்ஷணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்தபொருளென்க. ஆ, என்பது சிவஞானமும், க, என்பது மோக்ஷமும் ம, என்பது மலநாசமுமாம். ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம்பண்ணிச் சிவஞானத்தை உதிப்பித்து மோக்ஷத்தைக்கொடுத்தல்பற்றி, ஆகமம் எனப் பெயரா யிற்றென்று கூறுதலுமொன்று. இவ்வாகமம் காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம்,அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், மீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகலிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்கிதம், பாரமேசுரம், கிரணம், வாதுளம், என ருபத்தெட்டாம்; இவ்வாகமங்கள மாந்திரம் எனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்விருபத் தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக்கோடி கிரந்தங்களாம். இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்குபாதங்கள் உடையனவாயிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதி, பசு, பாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடுங்கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் என்பனவற்றையும், சமயவிசேட நிருவாண ஆசாரியாபிடோ கங் களையும் சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும் இவ்வாகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம்முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம். ஆகமம் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/411&oldid=1574837" இலிருந்து மீள்விக்கப்பட்டது