உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி

பாட்டு*

அன்னாய் வாழிவேண் டன்னை ஒண்ணுதல் ஒலிமென் கூந்தல்என் தோழி மேனி விறல்இழை நெகிழ்ந்த வீவருங் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்

5.

பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும்

வேறுபல் லுருவிற் கடவுட் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று

எய்யா மையலை நீயும் வருந்துதி

நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்

10.

புட்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும்

உட்கரந் துறையும் உய்யா அரும்படர்

செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்

முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை

நேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்

15.

சால்பும் வியப்பும் இயல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொன்மருங் கறிஞர் மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப

20.

நெடுந்தோர் எந்தை அருங்கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென நாமறி வுறாலிற் பழியும் உண்டோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/276&oldid=1579536" இலிருந்து மீள்விக்கப்பட்டது