உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிகளுள் தமிழ் மிகத் தொன்மை வாய்ந்த தென்பதையும் அது தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்ததென்பதையும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்த பெருமை மறைமலை அடிகளைச் சாரும். இச்சீரிய பணிக்குத் தமிழ் மக்கள் அன்னாருக்கு என்றும் கடமைப் பட்டுள்ளார்கள். தமிழக சரித்திரத்தின் கால வரையறையைப் பற்றிய நுண்ணியலராய்ச்சியில் அடிகளார் பெரும் பங்கு கொண்டுள்ளார்கள். மாணிக்கவாசகரின் காலத்தைப் பற்றிய கட்டுரைகள் அடிகளாரின் சரித்திர ஆராய்ச்சிக்கும் சீரிய புலமைக் கும் சான்றாக அமைந்துள்ளன.

பி.டி. ராஜன்

மறைமலை அடிகள் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் செய்த தொண்டு பெரியது. எளிய தெளிவான செந்தமிழில் எந்தக் கருத்தையும் வெளியிட முடியும் என்பதற்கு அவரது நூல்கள் தக்க சான்று. அடிகளார் சிறந்த சிந்தனையாளர். அவரது நூல்களைக் கற்று நாம் அனைவரும் பயன்பெற வேண்டும்.

டாக்டர் மு. அறம்.

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/322&oldid=1579617" இலிருந்து மீள்விக்கப்பட்டது