உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் – 9

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், கண்டவாறே சொல்வதிலும் நப்பூதனார் கொண்டுள்ள திறன், இன்பம் பயக்கும் வகையில் விழுப்பமுற விளங்கும் பொருட்கோவை ஆகிய வற்றை அடிகளார்பாராட்டுகிறார். பொருள்களுக்கு ஏற்ப அடிகள் மெதுவாகவும் விரைவாகவும் இடையிடையே தெற்றுப்பட்டும் சென்று, ஓசையின்பம் மாறி மாறிப் பயக்கும் வகையில் அமைந்துள்ளதைப் பாராட்டும் அடிகளார், ஏனைய ஒன்பது பாட்டுகளைப் போல முல்லைப்பாட்டு மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினைப் பெறாது குறைபடுதலையும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைப்பாட்டில் பொருள் இடையறல் படுகிற டங்கள், பொருள் பொருந்துமிடங்கள், பொருள் முற்றியும் முற்றாமல் விரிதலடைகிற இடங்கள், பொருள் முதிர்ச்சியுடன் முடிதலுறுமிடங்கள் ஆகியவற்றை முல்லைப்பாட்டில் நீளச்சென்று பொருந்தும் சொற்றொடர் முடிவு' என்ற தலைப்பில் அடிகளார் தம் ஆய்வுத்திறம் வெளிப்படும் வகையில் விளக்கியுள்ளார்.

பண்டைக்காலத்

தமிழரின்

வழக்கவொழுக்க

வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து நிமித்தம் பார்த்தல், காட்டில் பாடிவீடு, மகளிரோடு பாடி வீட்டில் தங்கல், யானைகள் வடமொழியில் பயிற்சி பெறல், அயலவர்கள் அரசர்களது பள்ளிறைக் காவலராயிருந்தமை. கம்ம வேலை செய்தல், ஏழடுக்கு மாளிகைகள், பல்வகை இன்ப அரும் பண்டங்கள், தமிழக மன்னர் நாற்படை வளம் ஆகிய உண்மைகளைத் தம் ஆராய்ச்சிக் குறிப்பில் அமைத்துள்ளார்.

முல்லைப்பாட்டாராய்ச்சி முதன் முதலில் எழுந்த செந்தமிழ்ச் செய்யுள் உண்மையாராய்ச்சி விளக்கமாகும்

நா. செயப்பிரகாசு

மறைமலை அடிகளாரின் இலக்கிய படைப்புகள்

பக். 5,6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/35&oldid=1578882" இலிருந்து மீள்விக்கப்பட்டது