உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

நான்காம் பதிப்பின் முகவுரை

இற்றைக்கு இருபத்தெட்டாண்டுகளுக்கு முன் யாம் இம் முல்லைப்பாட்டாராய்ச்சி யுரையை எழுதிய காலத்துப் பழைய சங்கத் தமிழிலக்கியங்களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலாயின அச்சிட்டு வெளிப்படுத்தப்படவில்லை. அதனால் யாம் பயின்ற தொல்காப்பிய வுரையிலிருந்தே இவ்வாராய்ச்சியுரைக்கு வேண்டிய மேற்கோட் செய்யுட்களை எடுத்துக்காட்டலாயினேம். அப்போது அம் மேற்கோள் உள்ள நூல்களைக் குறிப்பிடுதல் இயலாதிருந்தது. மற்று, இந் நாளிலோ எட்டுத்தொகை நூல்கள் அவ்வளவும் வெளிவரும் பேறு கிடைத்திருத்தலின், யாம் இப்பதிப்பின்கண் ஒவ்வொரு மேற் கோளுக்கும் அவை வந்துள்ள நூல்களின் பெயர்களைக் குறித்திருக்கின்றேம்.

அதுவேயுமன்றி, முற்பதிப்புகளில் இல்லாத சில பகுதிகளும் விளக்கவுரைக் குறிப்புகளும் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இன்னும், இந்நூலின் உரைநடைச் சுவையை முன்னையிலும் மிகுதிப்படுத்தல் வேண்டிப்,பலப்பல சொற்றிருத்தங்களும் சொற் றொடர்த் திருத்தங்களும் ஆங்காங்குச் செய்திருக்கின்றேம்.

இவையல்லாமலும், முற்பதிப்புக்களில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங் களைந்தெடுத்து, இவ்வுரைநடையைச் சாலவுந் தூய தனித் தமிழாக்கியிருக்

கின்றேம்.

இங்ஙனமாக உரைநடை வகையிலும் உரைக் குறிப்பு வகையிலுஞ் செய்யப்பட்ட சில பல மாறுதல்களைத் தவிரப் பொருள் வகையில் ஏதொரு மாறுதலும் இதன்கட் செய்யப்பட வில்லை. ஆகவே, முற்பதிப்புக்களைப் பயின்றவர்கள் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/42&oldid=1578889" இலிருந்து மீள்விக்கப்பட்டது