உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சங்க இலக்கிய ஆய்வு - 1

vii

மாண்புகழ் ஒளிவீசி நிற்கும்

தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அடிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரும்பணியாற்றி யுள்ளார்கள். தமிழ் மொழியைப் போலவே, அடிகள் ஆங்கிலத்தையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். சாந்துணையும் கற்க வேண்டும் என்ற சாதனை படைத்தவர்கள் அடிகள். ஆகவே, தாம் தேடிய பொருளையெல்லாம் ஒரு பெரிய நூல் நிலையமாகத் திகழும்படி செய்து வைத்தார்கள். அடிகளின் தமிழ் உரை நடை நூல்கள் தமிழின் தனித்தூய்மை நிலைக்குச் சான்றாக மிளிர்கின்றன. எண்ணற்ற சொன்மாரிகள் பொழிந்து மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டிவந்த அடிகள் மறைந்து விட்டனர். தமிழ் உள்ளளவும் மறைமலையடிகளின் மாண்புகழும்

மங்காது ஒளிவீசி நிற்கும்.

டாக்டர் எஸ்.ஜி. மணவாளராமாநுசம் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

(பக். 40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/8&oldid=1578855" இலிருந்து மீள்விக்கப்பட்டது