பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறந்துபோன அருந்ததியை அவளுடைய புடவையாலே மூடி வைத்துவிட்டு செட்டியார், வீட்டிற்கு ஓடிவந்துவிட்டார். மறுநாள் இரவு வரை அவர் ஊரிலே இல்லை. மதுரைக்குப்போய் விட்டு இரவு 9 மணிக்குத் திரும்பினர். வந்ததும் வராததுமாக பணிச்சட்டை, பனிக்குல்லா இவைகளே அணிந்து கொண்டு வெளியே புறப்பட்டார். அவரோடு அவரது பண்ணைக்காரன் கண்ணுச்சாமியும் உடன் போனன். ஊரைக் கடக்கும் வரை செட்டியார் வாயைத் திறக்கவில்லை. சிவன்கோயில் முடுக்குத் தாண்டிய பிறகுதான் அவர் பேச ஆரம்பித்தார். 'கண்ணுசாமி! உன்னுடைய தகப்பனர் காலத்திவேயி ருந்து உன் குடும்பமே எங்களுக்குப் பணிவிடை செய்து வரு கிறது. நீ விசுவாசமுள்ளவன். நன்றி மறவாதவன். அதனல்தான் உன் வீட்டில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இன்னும் நீ சுகமாக இருக்க வேண்டுமென்று நான் விரும்பு கிறேன்'- என்று கண்ணுச்சாமியின் உள்ளங் குளிரப் பேசிக் கொண்டே வந்த செட்டியார் புதியதாக அமைக்கப் போகும் தனது மாங்கொல்லேயின் புதருக்குள் மறைத்து வைத்திருக்கும் அந்தச் சடலத்தை அன்றிரவே புதைத்து விட வேண்டுமென்று கூறினர். மனிதனுக்கு முதுகைத் தடவில்ை தலை கனத்து விடு கிறது. உன்னைப்போல் உண்டா என்ருல் தன்னக்கூட் விற்று விடுவார்கள். அதுவும் ஏற்கனவே முதலாளிகள் அடிமைத்தனத் தில் ஊறிப்போயிருக்கும் ஏழைகள் முகப் புகழ்ச்சியிலிருந்து ஒரு நாளும் தப்பிக்க முடியாது. - - "இந்தப் பிரேதம் சவக்கிடங்கிலிருந்து விலைக்கு வாங்கப் பட்டது. அங்கேயே பொட்டலமாக கட்டிக் கொடுத்துவிட்டார் கள். நான்கூட முகத்தைப் பார்க்கவில்லை; முகத்தைப் பார்த் தால் மூன்று நாளேக்குச் சாப்பிட முடியாது. எனக்கே அப்படி யென்ருல் உனக்கும் அப்படித்தானே. யார் பெற்ற பிறவியோ? நமக்கு எதற்கு அதெல்லாம். பொட்டலத்தோடு அப்படியே புதைத்துவிடு. - இன்ஸ்பெக்டர் இன்னசிமுத்து துப்பறிந்ததில் இவ்வளவு விவரங்களும் அவருக்குக் கிடைத்தன. தசரதன் செட்டியார் மீது 77