பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மலருக்கு மது ஊட்டிய வண்டு

6 மலருக்கு மது ஊட்டிய வண்டு

கையிலிருந்த காப்பியை கட்டிலின் அருகிலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு அவள் திரும்புகையில், இன் னிக்கி என்ன விசேஷம் சோபா?’ என்று பாகவதர் அன்பான குரலில் வினவினார்.

'இன்று கார்த்திகைப் பண்டிகை ஐயா சோபியா பளிச்சென்று கூறினாள்.

ஜலதரங்கக் கிண்ணத்தில் குச்சியால் தட்டியதுபோல் சொற்கள் மணி மணியாக ஒலித்தன. அந்த ஒலி இன் பத்தை செவிமடுத்தபடி காப்பியை ரசித்துக் குடித்துக் கொண்டே கேட்டார்:

"தலையில் இப்படி பந்துபோல் துணியைச் சுற்றிக் கொள்ள உனக்கு எப்படித் தெரிந்தது?’’

'அம்மாதான் ஐயா, கட்டி விட்டாங்க.’’

இந்த வார்த்தையைக் கூறும்போது, அவளுள் ஏதோ தாழ்மையுணர்ச்சி தோன்றியிருக்க வேண்டும் என்று பாக வதிருக்குப் பட்டது. இல்லாவிட்டால், சாதாரணமாகத் தான் கேட்ட கேள்விக்கு உடனே இத்தனை அவசரமாக, 'இப்போ எனக்கு நன்றாக புரிஞ்சு போச்சு ஐயா:இனிமே நானே கூடத் தனியாகக் கட்டிக்குவேன் - என்று பட படப்புடன் கூறுவானேன்?

பாகவதர் காலி பண்ணி வைத்த காலி டபரா டம்ளர் களைக் கையில் எடுத்துக்கொண்டவள், "ஹாட் வாட்டர்... இல்லே... இல்லே... வெந்நீர் ரெடியானதும்- த்சு..." தயாரானதும் நான் வந்து கூப்பிடுகிறேன் ஐயா... என்றாள்.

பரவாயில்லை! ஹாட் வாட்டரையும்’, ‘ரெடி' யையும் தமிழ்ப் படுத்தல்லேனாலும் எனக்குப் புரியும் சோபா' என்று அவர் வேடிக்கையாகக் கூறியபோது,

சோபியா தன்னையும் மீறிச் சிரித்து விட்டாள்.