உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

மறுநாட் காலை பொங்கலென்ற
வாங்கிக் கரும்புடன் தேங்காய்கள்
குறும்புக் குப்பனின் தந்தையுமே
கொண்டு தம்வீடு வந்தடைந்தார்.

குப்பனின் நாக்கில் நீர்வழிய
‘குடுகுடு’ என்றே ஓடிவந்தான்.
அப்பா விடமுள்ள கரும்பினையே
அவசர மாகப் பறிக்கவந்தான்.

படைத்த பிறகுதான் தின்றிடலாம்.
பதறிடில் பயனில்லை” என்றுரைத்தார்.
தடுத்திடும் தந்தையின் மொழிகளினால்
தாங்கொணாக் கோபம் கொண்டனனே.

அம்மா கரும்பினைத் துண்டுகளாய்
அறுத்துமே பானையில் வைத்தனளே.
அம்மா பானையை வைக்குமிடம்
அறிந்தனன்; குப்பன் மகிழ்ந்தனனே.



203