உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

காலைக் கோழி கூவும் முன்னே,
கண்ணை விழித்துக் கொள்ளலாம்;
எண்ணெய் தேய்த்து முழுகலாம்.

பட்ட ணத்தில் வாங்கி வந்த
பட்டு ஆடை எடுக்கலாம்;
கட்டிப் பார்த்து மகிழலாம்.

பட்ச மான அப்பா விடம்,
பட்டாஸ் கட்டு வாங்கலாம்;
கட்டுச் சுட்டுத் தீர்க்கலாம்.

தருவாள் அம்மா, பட்ச ணங்கள்;
தட்டு நிறைய வாங்கலாம்;
பிட்டுப் பிட்டுப் போடலாம்.


29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/32&oldid=1703781" இலிருந்து மீள்விக்கப்பட்டது