உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

சிங்கம் எங்கே பார்க்கிறாய்?
சீறிப் பாய எண்ணமோ?

கொண்டு வந்து உன்னைத்தான்
கூட்டில் போட்டு விட்டோமே!

வெள்ளி போலத் தலைமயிர்
விரித்து நிற்கும் சிங்கமே,

கொள்ளி போன்ற கண்களால்
‘குறுகு’றென்று பார்ப்பதேன்?

கத்தி போன்ற நகங்களால்
கம்பி யைத்தான் கீறலாம்.

உயிரைக் கொன்று கம்பியின்
உடலைக் கிழிக்க முடியுமோ?

மிருக ராஜ சிங்கமே,
மிரட்டி ஏனோ பார்க்கிறாய்?

கூட்டை விட்டு வரவேதான்
பூட்டுப் போட்டி ருக்குதே!


40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/44&oldid=1718990" இலிருந்து மீள்விக்கப்பட்டது