உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf

பள்ளிக் கூடம் திறக்கும் காலம்.
பாலர் பையைத் தூக்கும் காலம்.

மணியின் ஓசை கேட்கும் காலம்.
மாண வர்கள் கூடும் காலம்.

வாத்தி யாரைப் பார்க்கும் காலம்.
வகுப்பு மாறி இருக்கும் காலம்.

புத்த கங்கள் வாங்கும் காலம்.
புரட்டிப் புரட்டிப் பார்க்கும் காலம்.

பரீட்சை தன்னில் தேர்ச்சி பெற்ற
பாலு ஜோராய் நடக்கும் காலம்.

தோற்றுப் போன கோபு மூஞ்சி
தொங்கிப் போச்சு, ஐயோ, காலம்!


45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/49&oldid=1719026" இலிருந்து மீள்விக்கப்பட்டது