உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மலரும் உள்ளம்-1.pdf
பசு

சத்து நிறைந்த பாலினையே
தந்து நம்மைக் காத்திடுமே
இத்தனை சாதுப் பிராணிதனை
எங்கே னும்நீ கண்டாயோ?

காளை

அண்டை ஊர்கள் சென்றிடவே
வண்டி யிழுத்துச் சென்றிடுமே.
மண்டிப் பயிர்கள் வளர்ந்திடவே,
மண்ணை நன்கு உழுதிடுமே.

நாய்

நன்றி உள்ள உயிர்களிலே
நல்ல மிருகம் இதுவொன்றாம்.
வெற்றி கொண்ட வீரன்போல்
வீட்டைக் காத்து நின்றிடுமே.


90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/96&oldid=1724794" இலிருந்து மீள்விக்கப்பட்டது