பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠罗酶 மலரும் நினைவுகள் பாடில்லை. அவை சகிக்க முடியாமல் மேலும் தலை விரித்தாடுகின்றன. தந்தை பெரியார் போன்ற ஒரு மகான் நம் சமயத்தவராகப் பிறந்து ஒரு நூற்றாண்டு வாழ்ந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பது. தொண்ணுறாண்டுகட்குமேல் இப்பூவுலகில்-குறிப் பாகத் தமிழகத்தின் மண்மீது- நடையாடிய தந்தை பெரியார் மறைந்தது அறிஞருலகத்திற்குப் பேரிழப்பு. இராஜாஜியைப் போலவே உடல்நிலை குன்றிய காலத் திலும் மனநிலையில் துடிப்பாக வாழ்ந்தவர் பெரியார் "இந்தியப் பேரொளி (சவகர்லால் நேரு), தமிழ்ப் பேரொளி (அறிஞர் அண்ணா) என்று வெளியிட்டதைப் போன்றே இவர் நினைவாக நூல் ஒன்று வெளியிடத் திட்டமிட்டது சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம். பல அறிஞர்களின் கட்டுரைகள், கருத்துகள் முதலியவற்றைத் திரட்டி முறைப்படுத்தியது. எக்காரணத்தாலோ அந்த நூல் இன்றுவரை வெளியிடப்பெறவில்லை. அதற்கு அடியேனும் ஒரு சிறிய கட்டுரை எழுதினேன். அண்மைக் காலம் வரை அதன் நகல் என்னிடம் இருந்து வந்தது; ஒரு நாள் பலவற்றைக் கிழித்தெறியும்போது இதுவும் அக்கதியை அடைந்து விட்டது. ஆனால் அதன் சாரம் நினைவில் உள்ளது. பெரியாரின் சீடர்க்ள் யாவரும் தம் பெயர்களை மாற்றிக் கொண்டனர். ஆனால் அவர் பெயராகிய இராமசாமி அவரோடு நிலைத்து நின்றது . இராமர் படத்தை ஊர்வலம் செய்து செருப்பால் அடிக்கச் செய்தார். ஆனால் இராமசாமி என்ற தம் பெயரைக் கட்டுரைகளிலும், காசோலைகளிலும் எத்தனையோ பத்திரங்களிலும் இன்ன பிறவற்றிலும் எழுதித் தள்ளி யிருப்பார். சிரீராம செயம்’ என்பதை இலட்சக்கணக்காகப் பயன் கருதி எழுதியவர்கள் உண்டு. இவர் பயன் கருதாது தம் பெயரை எழுதி இராம பக்தரானார் என்பது அடியேனின் கணிப்பு, இராமகாதையில் வரும் அதுமனுக்கு நிகரான இராமபக்தர்கள் இவ்வுலகில்