பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு 5Tண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள்-666) சட்டக்கல்லூரிப் பேராசிரியர், அதன் துணைமுதல்வர், பின்னர் முதல்வர், அதன்பின்னர்சட்டப்படிப்பின்இயக்குநர் மாநிலக் கல்வி இயக்குநர், இறுதியாகத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் (முதல் பத்தாண்டுகள்) என்று பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி ஒல்காப் பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்த மேதை திரு.எஸ்.கோவிந்த ராஜுலு நாயுடு அவர்கள். சென்னைப் பல்கலைக் கழகத் தின் ஆட்சிக் குழுவில் பல்லாண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றி டாக்டர் ஏ. எல். முதலியாருக்கு (துணை வேந்தர்) வலக்கையாக நின்று பணியாற்றியவர்கள். சிந்தனைக்கும் செயலாற்றுந் திறனுக்கும் டாக்டர் முதலி யாருக்கு நிகரானவர்கள். இதனை நன்கு மதிப்பிட்ட டாக்டர் டி. சகங்காதரெட்டி (திருவேங்கடவன் பல்கலைக் கழகத் துணைவேந்தராக ஆறு ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றவர்) இவரை டாக்டர் ஏ. எல். முதலியாரின் Gol sul-ć51' Lolius’ (Dr. A. L. Mudaliars Pocket Edition என்று அடிக்கடி வேடிக்கையாகக் கூறினதைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. 1943-44 இல் இப்பெருமகனைச் சந்தித்து ஓர் உதவியை நாடினேன். துறையூர் உயர்நிலைப் பள்ளியில்