பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷3垒 மலரும் நினைவுகள் வற்புறுத்தினால் பத்து மணிக்குப் பணியைத் துறந்து விடும் ராஜினாமா கடிதம் தந்து என்னைக் கழற்றிக் கொள்ளும் ஒரே வழிதான் எனக்குத் தோன்றுகின்றது. ஒரு துறைக்கு அடிமைப்பட்டு, தன்மானம் இழந்து, தமிழ் வளர்ச்சிக்குக் குந்தகம் விளையும் நிலையை உண்டாக்கிக் கொள்வதைவிட வேலையின்றிச் சிரமப்படுவதை நான் ஏற்பேன்' என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினேன். என் பேச்சைச் செவிமடுத்த துணைவேந்தர் அசந்து போனார் . அவரும் உணர்ச்சி வசப்பட்டு என்னைக் கட்டிக் கொண்டார். மிஸ்டர் ரெட்டியார், கவலைப் படாதீர்கள். அந்தக் கருத்துரு செயற்படுத்தப்படாது. அது கருவிலே கலைந்துவிடும்; அது செயற்படாது தானே அழிந்துவிடும்' என்று கூறி உற்சாகப்படுத்தினார். எனக்கும் விடை கொடுத்துக் குளியலறைக்குச் சென்று விட்டார். அப்பாடா. வழியின் குறுக்கே போடப்பட இருந்த ஒரு பெரிய தடைக்கல் போடப்படாமல் போய் விட்டது” என்று ஒரு செருமூச்சு விட்டேன். இது குன்றத் தின் மீது இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் ஏழுமலை யானின் திருவிளையாடல், நாடகம் போலும் என்று. நினைத்துக் கொண்டு வெற்றியுடன் அறைக்குத் திரும்பி னேன். திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் கோவிந்தராஜ சுவாமியை அண்ணன் என்றும், மலையின் மீது எழுந்தருளி யிருக்கும் சீநிவாசன் தம்பி என்றும், தம்பி அரசின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, நிர்வாகத்தைச் சீருடனும் சிறப்புடனும் கவனித்துக் கொள்வது என்ற பொறுப்புகள் யாவும் அண்ணனைச் சார்ந்தது என்று கருதும் மரபு ஒன்து உண்டு. இரவு பகல் ஓயாது ஒழியாது அடியார்கட்குச் சேவை தந்து கொண்டே ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு’ என்று நின்று கொண்டே பணம் திரட்டும் சீநிவாசன் தன் அண்ணன் கோவிந்தராசனைக்