பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 84. மலரும் நினைவுகள் கழக உயர்நிலைப் பள்ளி. அப்பள்ளியின் ஒழுங்குமுறை மிகவும் சீர்கேடடைந்திருந்தது. பல்வேறு புகார்க் கடிதங் கள் திரு நாச்சியப்பக் கவுண்டருக்குப் பொது மக்களிட மிருந்து வந்து குவிந்திருந்தன. அப்போது அங்குத் தலைமையாசிரியராகப் பணியாற்றிய திரு சேஷகிரி ராவ் மிக நல்லவராக இருந்தாலும் நிர்வாகத் திறமை போதா தவர். பள்ளி ஒழுங்கு முறையை நிலை நாட்டுவதில் பேரும் புகழும் பெற்றிருந்த திரு பி. ஆர். சுப்பிரமணியத்தை அங்கு மாற்றல் செய்தார் திரு கவுண்டர் . ஒழுங்கு முறையை நிலை நாட்டுவதற்காகவே திரு பி.ஆர்.எஸ்ஸை அங்கு மாற்றியிருப்பதாகக் கூறினார் கழகத் தலைவர். திரு சுப்பிரமணியமும் சில வசதிகளைச் செய்து தந்தால் தம்மால் இயன்ற அளவு சீர்திருத்தம் செய்வதாக ஒப்புக் கொண்டார்; தலைவரும் இவற்றைச் செய்து தருவதாக வாக்களித்தார். திரு பி. ஆர். சுப்பிரமணியமும் இராசிபுரம் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றதும் ஒரு திங்கள் வரை பள்ளி ஒழுங்குமுறை சீர்கெட்டதற்கான காரணங் களை ஆராய்ந்தார். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும் அதற்கேற்றவாறு ஆசிரியர் தொகை அதிகமாக இருப்பதையும் கண்டார். படிப்படியாகச் சீர்திருத்தம் செய்யும் பணியில் இறங்கினார். ஒழுங்கு முறை சீர்கேட்டிற்குக் காரணமாக இருந்த சில ஆசிரியர் களை வேற்றுார்கட்கு மாற்றலாகும் படி செய்தார். மூன்று உதவித் தலைமையாசிரியர் நியமனத்திற்குப் பரிந்துரை செய்து சில முக்கியமான பணிகளை அவர்களிடையே பிரித்து வழங்கித் தம் பணியின் பளுவினைக் குறைத்துக் கொண்டார். சுற்றுப் புறச்சுவர்கள் இரண்டு மூன்று இடங் களில் உடைக்கப் பெற்று அவற்றின் வழியாக சில ஆசிரியர் களும் மாணவர்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். முதலில் அவற்றை அடைக்கச் செய்து அவற்றின் வழியாக வருவதையும் போவதையும் தடுத்தார். முதல் மணி