பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. பாவேந்தர் பாரதிதாசன் ஒரு பயில்வான் போன்றசெம்மையான உடற்கட்டு, அகன்ற நெற்றி, அகன்ற அரை (இட்லர்) மீசை, எடுப்பான முகத்தோற்றம், வீரப்பொலிவு, கூரிய வீரப்பார்வை இவை யாவும்உருண்டுதிரண்ட உருவமேபாவேந்தர்பாரதிதாசன், இந்த உருவத்தின் மண்டையின் உள்ளே அடங்கிக் கிடந் தவை தமிழ்பற்று (வெறி என்று கூடச் சொல்லலாம்), சமுதாயக் கேடுகள் பற்றிய சீற்றம், தோசை மாவு புளித்துக் கொண்டிருப்பது போன்ற கவிதை உணர்வுகள், இசைப்பண்பு ஆகியவை.இவை இவருடன் சாதாரணமாக உரையாடும் போதே வெளிப்படுபவை. இங்ங்னம் புறக் தோற்றமும் அகத்தோற்றமும் அடங்கிய மனிதரே புதுச்சேரி தமிழகத்திற்குத் தந்த கனக சுப்புரத் தினம். ஆம்; தமிழர்களைப் பொறுத்தவரை இரத்தினமே விலை மதிப்பற்ற மாணிக்கமே. இந்தக் கம்பீரமான உருவத்தையுடைய மனிதர் ஒருநாள்-1947 பிப்பிரவரி என்பதாக நினைவுமுற்பகல் பதினொரு மணி இருக்கும்; அப்போது என் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். அக்காலத்தில் வித்துவான் தேர்விலும் வெற்றியடைந்திருந்தேன். பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை என்ற முப்பெருங் கவிஞர்களின் பாடல்களில் ஆழங்கால்பட்டு அநுபவித்திருந்த காலம். அப்போது பாரதிதாசன் கவிதைகள் (முதற்றொகுதி), எதிர்பாராதமுத்தம், அழகின்