பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிராசபண்டிதர் செகவீர பாண்டியனார் £1 I என்று ஒரிடத்தில் சிறப்பிப்பான். இந்தச் சுவையான கவிதைப் பகுதியினை எண்ணும்போது கம்பனைச் சுவைத்துத் தேக்கிட்ட நம் மனக்கண் முன்பு எண்ணற்ற காட்சிகள் தோன்றுகின்றன.' இராகவன் புகழினைச் செவிக்குத் தேனாக இனிக் கும் வண்ணம் திருத்திய பெருமையை இரு கவிநாயகரிடத் திலும் கண்டு களிக்கலாம். வான்மீகத்திலுள்ள சில வற்றைத் திருத்தித் தமிழர்களின் மரபுக்கும் நாகரிகத்திற் கும் ஏற்றவாறு இராமகாதையை அமைத்த பெருமை கவிநாயகனாகிய கம்பனுக்கு உரியது. இராமனது காடுறை வாழ்க்கையின் வரலாற்றில் நிகழ்ந்த சில பேராபத்துகளை நீக்கி அதனைச் செம்மையாக மாண் புறுத்திய பெருமை கவிநாயகனாகிய வாயுபுத்திரனைச் சாரும். காடுறை வாழ்க்கைக் காலத்தில் காவிய நாயக னாகிய இராமனது வரலாற்றில் எழுந்த கோணல்கள் எவை என்பதையும் அவற்றை நிமிர்த்தின. அதுமனின் திறத்தினையும் உங்கட்குக் காட்டுவேன்' என்று கூறி அவற்றை விளக்கத் தொடங்கினார் புலவர் பெருமான். முதலாவது : சீதாப்பிராட்டி பல திங்கள்களாக அரக்கியர்களால் நெருக்குண்டு மிகவும் மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்து கிடக்கின்றாள். புலிக்குழாத்தகப்பட்ட மாணிளம் பேடைபோல் கண்கள் இமைத்தலையும் முகிழ்த்தலையும் துறந்து வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியிலா மெய்யுடன் விளங்குகின்றாள். இந்நிலையில் இராவணன் பலவித விருதுகளுடன் பிராட்டியிருக்கும் இடம் வந்து பலவிதமாகப் பேசித் தன் கருத்தை முற்றுவிக்குமாறு வேண்டியதையும், பின்னர் இலங்கை வேந்தனின் ஆணைப்படி அரக்கிமார் பலவாறு பயமுறுத்தியதையும் திரிசடை பிராட்டியாரைத் தேற்றிய தையும் மரத்தின்மீது மறைந்து நிற்கும் மாருதி காண்கின் றான். பிறகு மந்திர வலியால் அரக்கிமார்களை உறங்கச்