பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு. வரதராசனார் 241 அதிகப்பட்டுக் கொண்டும் வந்தது. நாடோறும் 250 .ேC. உப்புநீர் உடலில் குத்திப் புகுத்தப்பெற்றது. இருபது நாட்கள் கிடந்த நிலைதான். சிறுநீர் கழித்தல், பேதி யாதல் முதலியவை படுக்கைத்தட்டில் (Bed pan) தான். காலையிலும் மாலையிலும் ஆராய்ச்சி மாணவர்கள். முதுகலை வகுப்பு மாணவர்கள் செய்த பணி விடைகளுக்குக் கணக்கே இல்லை. திரு செய்க் குமார் என்ற மாணவனின் பணி என்னால் மறக்க முடி யாதது. அவர்கள் படிப்பிற்காக, நலத்திற்காக உயிர் விட்டு உழைத்ததை அவர்கள் மறக்க வில்லை. நான் திருநாடு அலங்கரித்து விடுவேனோ என்று கூட ஐயப்படத் தொடங்கினர். நானும் டாக்டர் மு. வ. சென்ற வழியைத் தொடர்வேனோ என்று சிறிது ஐயப்பட்டேன். என்று வருவான் எமனென் றெதிர்நோக்கி நின்று தளர்கின்றேன் நித்தமும்-மன்றில் நடங்கண்ட ஈசன் நடராசன் பாதத் திடங்கண்டு வை நீ எமக்கு" என்று பண்டிதமணியின் பிரிவிற்கு இரங்கிப் பாடிய தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் அடிக்கடி நினைவிற்கு வரத் தொடங்கியது. மன உறுதி குறையவில்லை; முகத்திலும் பொலிவு இருந்துகொண்டே இருந்தது. இன்னும் சமூகச் சேவைக்காக வைத்திருக்கின்றான் ஏழுமலையான் என்று உறுதியாக நம்பினேன். நான் பிழைக்க வேண்டும் என்று என் மாணவர்கள் இறைவனை வேண்டினர்; தோழ ஆசிரியர்கள் (ஒருவரைத் தவிர) பிரார்த்தித்தனர். என் ஆயுட்காலமும் (பிராரத்த கருமம்-நுகர்வினை) முடியாத தால்பிழைத்துக்கொண்டேன். எனக்குச் சுவையாக உண்ட கத்தரிக்காய் கூட்டின் மீது ஐயம். சென்னையிலும் விருந் துண்டவர்கள் பலருக்கும் பேதி ஏற்பட்டதாம். பூச்சி 5. தே. வி : மலரும் மாலையும்-பண்டிதமணியின் பிரிவு-3 ம நி-16