பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ. சீநிவாசராகவன் 257 மாகத்தார் தேவி மாரும் வான்சிறப் புற்றார். என்கின்றான் கவிஞன். ஒரு பாகத்தில் பார்வதிதேவியை வைத்துக் கொண்டிருப்பதனால் அம்மை அப்பன் என்றும் தையல் பாகன்' என்றும் வழங்குகின்ற சிவபெருமானும் தன் தேவியை தலையில் வைத்து மதிக்கும்படி ஆயிற்று. மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன், மகுடத்தாள் இனி தாமரை மலரில் வாழும் பெரிய பிராட்டியாருக்கும் கவிஞன் எப்படி இடம் அமைக்கின்றான் தெரியுமா? இப்போது முழுப்பாடலையும் காண்போம். சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற் கொத்த மாகத் தார் தேவி மாரும் வான்சிறப் புற்றார்; மற்றைப் பாகத்தால் அல்லள் ஈசன் மகுடத்தாள்: பதுமத் தாளும் ஆகத்தால் அல்லள் மாயன் ஆயிரம் மெளலி மேலாள்.' இங்குப் பெரிய பிராட்டியார் திருமார்பில் வீற்றிருக்கத் தக்கவள் அல்லள் ஆகின்றாள்; கோடி கோடி சூரியப் பிரகாசத்தோடு கூடிய அவனது ஆயிரமாயிரம் கிரீடங்கள் குவிந்து குவிந்து அலங்கரிக்கும் அவரது கிரீடங்களுக்கும் மேலான இடத்தைப் பெற்றுவிடுகின்றாள். ஆம்; ஆயிரம் மெளவி மேலாள். பாடலின் பொருள், உணர்ச்சி, சொல் எல்லாம் சேர்ந்து நம்மையும் கடத்திக் கொண்டு எட்டாத அதுபவ உலகிற்குக் கொண்டு சேர்த்து விடுகின்றன. 11. சுந்தர. திருவடிதொழுத-67 ம நி-17