பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意蓉秒 மலரும் நினைவுகள் செய்து என் வேண்டுகோளையும் தெரிவித்தார். பி.பூரியும் என் இளமைத் துடிப்பையும் தமிழார்வத்தையும் கண்டு மகிழ்ந்து ஒரு வாரத்தில் அனுப்புவதாக என்னிடமிருந்த நூலின் படியைப் பெற்றுக் கொண்டார். நானும் திருமணம் உறுதியான பிறகு திருமணம் தடைபெறுவது உறுதி என்று இளைஞன் ஒருவர் மகிழ்ச்சியடைவதுபோல அணிந்துரை பெறுவது உறுதி என்ற மகிழ்ச்சிப் பெருக்குடன் அன்றிரவே புறப்பட்டு மறுநாள் காலை ஒன்பது மணிக்குள் துறையூர் வந்து சேர்ந்தேன். ஒரு வாரத்தில் சொன்னபடியே அை துரையையும் அலுப்பியருளினார்கள் பி. ரீ. அவர்கள் . அவர்கள் நூல் முழுவதையும் படித்து, திறனாய்ந்து, எழுதிய வாழ்த் துரை போலவும் ஆசியுரை போலவும் அமைந்த அணிந்துரையையும் ஈண்டு அப்படியே தருகின் றேன்: 'இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பத்திரிகை வாசித்து வருகிறார்கள். புஸ்தக வாசகர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். தமிழர்கள் பரந்த உலகம் தெரிந்து வாழ விரும்புகின்றார்கள். துாரத்தைச் சமீபமாக்கிப் பரந்த உலகத்தைச் சுருக்கிக் காட்டும் விஞ்ஞான அதிசயங்களையும், பயமுறுத்தும் விஞ்ஞான விபரீதங்களையும் அறிந்து ஆட்கொண்டு வசதியாக வாழ்க்கை நடத்த விரும்புகிறார்கள். ஆம், இன்றைய சுதந்திர இந்தியாவின் இன்றியமையாத பகுதியாகத் தமிழ்நாடு தன் பிற்காலக் கிணற்றுத் தவளை வாழ்வை விட்டு விடுதலையாகிக் கடல் போன்ற ஒரு புது வாழ்வை நோக்கிச் செல்ல ஆசைப்படுகின்றது. இந்தப் புதுமைப் பெரு வாழ்வில் காந்தீயம் போன்ற உயர்ந்த இலட்சியங் களுக்கு விசேஷ இடம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நம் ஆசைகள், அச்சங்கள், கருத்துகள், நம்பிக்கை கள், இலட்சியங்கள், பரபரப்புகள், துடிப்புகள் ஆகிய வற்றை உள்ளபடியே பிரதிபலித்து நம் மக்களிடைய ஒரு புது வாழ்வியக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடிய சக்திகளைப்