பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱智爵 மலரும் நினைவுகள் தொகை நூல்களிலிருந்தும் இந்த ஆசிரியர் பன்னிரண்டு உயிரோவியங்களைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள் இந்தக் கவிதைச் சித்திரங்களை! என்று காட்டுகிறார். இது போன்ற நன்முயற்சிகளே சங்க நூல்களின் தனி மேதையை யும் சங்கப் புலவர்களின் அறிவுத்திறனையும் புலமை வனப்பத்தையும் இந்நாளில் பத்திரிகைகள் கதைகள் படிக்கத் தெரிந்த தமிழ் வாசகர்களுக்கும் ஒருவாறு அறிவிக்கக் கூடும்' சங்கம் வளர்த்த தமிழ்க் கடலிலே திரண்டெழுத்த அமுதமாகிய திருக்குறள் இந்த ஆசிரியரின் இரண்டு கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கிறது. இக்கட்டுரைகள் நடுநாயகமாக அமைந்திருப்பது பொருத்தமுடையது. இவ்வாசிரியர் நாலடியார்’ என்ற நீதிச் சுரங்கத்தையும் நினைப்பூட்டிச் செல்கின்றார். ' வழியில் "சிந்தாமணியை யும், மணிவாசகப் பெருமானின் இரண்டு மணிகளையும் மறந்து விடவில்லை. சங்க நூல்களில் அரியாசனம் பெற்றிருக்கும் அரசிளங் குமரியை என்றும் குமரியாக்கிச் சக்கரவர்த்தினியாகவும் வைத்த கவிச்சக்கரவர்த்தியின் காவிய باستان تنها طوي அரண்மனையிலே முன்வாசற் பூஞ்சோலையில் சாதாரண மாக மலர்ந்திருக்கும் நான்கு மலர்களைத் தம் புலமைத் திறமையால் மணம் மிக வீசக் காட்டிச் செல்கின்றார் ஆசிரியர்.' 'திருவிளையாடற் புராணத்தையும் காஞ்சி புராணத் தையும் நளவெண்பாவையும் கூட மறந்து விடாமல் மைல் கற்களாகக் காட்டித் தமிழின் 'இராஜபாதை'யை நீளக் காட்டி விடுகின்றார். நமது இன்றைய புரட்சிக் கவிஞரையும் கண்டு காட்டி, இப்படியே இன்னும் எத்தனையோ மைல் கற்கள்!' என்று உய்த்துணரவைக் கின்றார். புரட்சிக்கரமான மாறுதல்களிலும் பொற்சரடு போல் சங்ககாலத் தமிழ்ப் பண்பு ஊடுருவிக்கிடக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.'