பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 மலரும் நினைவுகள் கூடத்தின் நடுவில், வானவெளியுள்ள, வட்டவடிவமான தொட்டிகட்டு ஒன்றும் இருந்தது. ஞாயிறன்று மாலை ஐந்து மணிக்கெல்லாம் கூட்டம் அதிகமாகக் கூடி விடும். எல்லோரும் அமர்ந்திருப்பது அந்தத் தொட்டிக்கட்டுக் குள்ளேதான். வட்டததொட்டித் தலைவர் டி.கே.சியால் கம்பன் காவியம் முறையாகப் படிக்கப்படும். இக்கூட்டத் தில் பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவரிலிருந்து எண்பது வயதிற்கு மேலான பழுத்த கிழவர்கள் வரை டி.கே.சி. படிக்கும் கம்பன் கவிதைகளின் சுவையை அநுபவித்து மகிழ்வர் என்று கூறி எனக்கு உற்சாகம் ஊட்டி வருபவர் திரு. முத்துவேல் பிள்ளை. D 口 ü துறையூரிலிருந்தபோது அவரது கம்பராமாயணப் பதிப்பைப் பார்த்திருக்கின்றேன். மேலோட்டமாகப் பார்த்துப் படித்து மகிழ்ந்திருக்கின்றேன். டி.கே.சி. கூறும் செருகு கவிகள் , டி.கே.சி திருத்திய கம்ப ராமாயணப் பாடல்கள்' என்பவற்றைப் பற்றியெல்லாம் நான் அப்போது சிந்திக்கவில்லை. நான் கல்லூரியில் படித்த காலத்தில் ‘தீபன்’ என்ற புனை பெயரில் வெளியிடப் பெற்ற சில கட்டுரைகளைப் படித்தும் மகிழ்ந் இருக்கின்றேன். பிரகண்டவிகடனில் முதலியார் வீட்டுக் கல்யாணம்' என்ற நகைச்சுவைக் கட்டுரையைக் கோடை விடுமுறையில்கோட்டாத்துTர்'திரு.K.Nநல்லப்பரெட்டியார் வீட்டு மாடியில் பத்துப் பேர்களுக்கு நடுவில் படித்து அனை வரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. ஆனால் அப்போது "தீபன் என்ற புனைபெயர் டி.கே.சியின் அருமை மகன் டி.சி. தித்தாரப்பன் என்பது எனக்குத் தெரியாது. ஏன்? 3. கோட்டாத்துார் என்பது என் சொந்த ஊர். துறையூரிலிருந்து கீழ்த்திசையில் சுமார் ஏழு கல் தொலைவிலுள்ளது.