பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - மலரும் நினைவுகள் தீர்மானித்து வைத்திருந்தபடி எரியை வளர்க்கச் செய் கின்றான். இனி யான் இப்படிப்பட்ட துயரத்தை பொறுக்க முடியாது’ என்கின்றான்; அரச சுமையை யாரிடம் ஒப்புவிப்பது? தானும் போய்விட்டால் அந்தப் பொறுப்பை ஏற்பதற்காக மிஞ்சியிருப்பவன் சத்துருக்கனன் மட்டிலுமே. அவனிடம் பொறுப்பை ஒப்படைக்க எண்ணுகின்றான். இராமகாதையில் சத்துருக்கனன் பேசி நாம் கேட்டதே இல்லை. இறுதி வரையில் அவன் பேசாத தம்பியாகவே இருந்து வந்திருக்கின்றான். பரதன் தியின் முன்னால் நின்றிருக்கும்போது சொல்லி யனுப்பியபடி சத்துருக்கனன் வருகின்றான். வந்ததும் அவனிடம், மின்னு தீயிடை யான் இனி வீடுவன் மன்னன் ஆதி; என் சொல்லை மறாது’** என்று தான் தீக்குளிக்கப் போவதையும் அவன் அரசுப் பொறுப்பை ஏற்க வேண்டியதையும் கூறிவிடுகின்றான், சத்துருக்கனனுக்கோ அளவுக்கு மீறிய வருத்தம், திகைப்பு, துயரம் எல்லாம். பேசாத தம்பி இப்போது பேசி விடுகின்றான். எப்படி? இராமனோ கானாளப் போய் விட்டான். தன்னை நம்பியிருந்த மனையாளான நிலமகளை நட்டாற்றில் கை விட்டதுபோல் விட்டு விட்டான். இதைவிடக் கொடிய செயல் வேறு ஏதேனும் உண்டா? இங்ங்ணம் செய்துவிட்டுப் போன இராமனைப் பின் தொடர்ந்து போய்விட்டான் ஒரு தம்பி. மற்றொரு தம்பியோ போனவர்கள் வருவார்கள், வருவார்கள்' என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து இறுதியில் ஏமாந்து போகின்றான். இப்போது அவன் உயிரையே விடத் துணிந்துவிட்டான். பரதனுடைய நொந்த உயிருக்கும் நல்லதொரு காலம் வந்து விட்டதாகத் தோன்றுகின்றது. அடுத்தாற் போலிருக்கின்றான் ஒரு தம்பி! ஆம்; இவன் தான் சத்துருக்கனன். இவர்கள் 5. யுத்த. மீட்சி-220.