பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரசிகமணி டி. கே. சி. 297° எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வாஎன் அப்பா அழகியசெல் லையாநான்-இப்பாரில் சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன்முகத்தை எந்தநாள் காண்பேன் இனி. என்பதுதான் அந்தப்பாடல்.இந்தப் பாடலைப் படித்ததும் டி.கே.சி. சோகத்தால் துடித்திருப்பார் என்றுதான் நாம் நினைப்போம். அதுதான் இல்லை. டி.கே.சி. இறந்த தன் மகனை மறந்தார். பாடலினை அநுபவித்தார், அநுபவித் தார். அதன் பிறகு அவர் சொன்னது: இப்படி அற்புத மான கவிதை தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துங்கூட அதைப் பெறலாம்' என்று. இப்படி அருமை மகனைப் பிரிந்த காலத்திலும் அவன் மீது பாடப் பட்ட பாட்டை அதுபவிக்கும் அபூர்வப் பிறவியை என்ன என்று சொல்வது? ஜஸ்டிஸ் மகராஜன் அவரை ரசஞ்ஞானி என்கின்றார். சரியான விருதுதான் இது டி. கே. சி.க்கு. இத்தகைய இரசிகமணியை, கூடியிருக்கும் நண்ப ரெல்லாம் குடித்து மகிழ்ந்து கூத்தாட பாடிப் பாடிப் பாடலிலே பாலும் தேனும் கறந்துதவும் தாடி இல்லாத் தாகூர் செய் ஜால வித்தை அத்தனையும் தேடி அழகாய்ச் சொன்ன தமிழ்ச் செல்வா! வாழ்க! வாழ்கவே. என்ற பாடலால் வாழ்த்தி மகிழ்கின்றார், கவிமணி.