பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 மலரும் நினைவுகள் பெருமனத்துடன் என் இல்லத்திற்கு எழுந்தருளி விருந் துண்டது எனது பெறற்கரும் பேறு என்பதை இன்றும் நினைந்து போற்றுகின்றேன். நினைவு-2: ஒருநாள் ஞாயிறன்று சிற்றுண்டி முடித்துக் கொண்டு அவர் இல்லத்திற்குச் சென்றேன். யாரும் இல்லை; தனிமையாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். சிறிது நேரம் நானும் அவர் அருகில் அமர்ந்திருந்தேன். என்ன நினைத்தாரோ,தெரியவில்லை. திடீரென்று, ரெட்டியார், வாருங்கள் பிள்ளையார் பட்டிக்குப் போய் வரலாம்' என்றார். யாரோ ஒர் ஆள் மூலம் நான் பிள்ளையார் பட்டிக்குப் போயிருப்பதாக என் வீட்டுக்குச் சொல்லியனுப்பி விட்டார். இருவரும் பேருந்து மூலம் பிள்ளையார் பட்டி போய்ச் சேர்ந்தோம். கல்சொல்லும் கதையை'ச் சொல்லுவதில் வல்ல சா.க. பிள்ளையார் பட்டி வரலாற்றை விளக்கியது இன்றும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. பல்லவ மன்னன் மகேந்திர வர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்சோதி (பின்னர் சிறுத்தொண்ட நாயனார் என்ற பெயரில் பெரிய புராணத்தில் இடம் பெற்றவர்) சளுக்கிய மன்னன் புலிகேசிமீது எடுத்த படையெடுப்பில் இடம் பெற்றவர். இவர் வாதாபிக் கோட்டையிலுள்ள கணபதிச் சிலையைப் பெயர்த்தெடுத்து வந்து தம் சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில்(நன்னிலத்திற்கு அருகிலுள்ளது) பிரதிட்டை செய்து விடுகின்றார். ஆனால் தம்மைப்போல் கணபதிக் காதல் உள்ளவர்கள் தாம் பிரதிட்டை செய்து வைத்த கணபதியைப் பெயர்த்தெடுத்துச் சென்றால் என்ன செய்வது என்ற கவலை இருந்தது பரஞ்சோதிக்கு. பிறருக்கும் இந்த விதமான கவலை இருந்திருக்கலாம். மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் காலத்தில் பிள்ளையார் பட்டியில் குடைவரைக் கோயில் தோன்றியது. அதனுள் ஒரு பாறையில் கணபதியும் செதுக்கி வைக்கப்பட்டார். இந்தப் பிள்ளையாரே தேசிக