பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 fi மலரும் நினைவுகள் அவரும் என்னை அன்புடன் வரவேற்று சிற்றுண்டி வழங்கி நான் ஊகத்தால் ஐயுற்றிருந்த சதித்திட்டத்தைத் தெளி வாக்கினார். தக்க நேரத்தில் தக்கமுறையில் அனைவரும் வியக்கும் முறையில் ஆணை அனுப்புவதாக உறுதியும் கூறினார். இவ்வளவு பேர் துணை இருந்தாலும் கனேசப் பெருமானே சா.க. மூலம் எல்லா விக்கினங்களையும் போக்கினார் என்பது என் அதிராத நம்பிக்கை. டாக்டர் பட்டம் (Ph.D) பெறுவது எளிது என்றே திரு சா.க., திரு இராய.சொ. செயலர் திரு CW.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் இவர்களிடம் பிரியாவிடை பெற்றுத் திருப்பதிப்பணியை ஏற்றேன். திருப்பதி சென்றா லும் குடும்பம் ஆறு ஆண்டுகள் காரைக்குடியிலிருந்ததால் விடுமுறைக் காலம் காரைக்குடியில்தான் கழிந்தது. இந்த மூவரின் அன்புறவும் தொடர்ந்து இருந்து வந்தது. 1965-க்குப் பிறகு சா. க.வின் தொடர்பு அறுந்தாலும் (10 ஆண்டுகள்) அவர் என் மனத்தில் நிலையாகவே இருந்து வந்தார். காங்கிரசு ஆளும் கட்சியாக இருந்து தமிழகத்தை ஆண்டு வந்த காலத்தில் உண்மையாகத் தொண்டு புரிந்த சா.க.வுக்கு எந்தவித பொறுப்போ பதவியோ கிடைக்க வில்லை. சட்டமன்றப் பேரவைக்கு உறுப்பினராக நிற்பதற்குக் கூட அநுமதி வழங்கப் பெறவில்லை. 1967-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணாத்துரை முதலமைச்ச ராகப் பதவியேற்றார். இவர் காலத்தில் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் சா.க.வுக்கு முக்கிய பொறுப்பு தரப்பெற்றது. தொடர்ந்து சட்டமன்ற மேலவையிலும் உறுப்பினராக வருவதற்கு வாய்ப்பும் அளித்தார் அண்ணா. தவிரவும் காரைக்குடியில் கம்பன் மணி மண்டபம் அமைக்கவும்