பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←83 Ꮾ. மலரும் நினைவுகள் நாட்களுக்குப் பின்னர் இராயவரத்தில் நடைபெற்ற திருமணத்திற்கும் சென்றிருந்தேன். இராய.சொ.வுடன் செல்லும்போது மகிழ்வுந்து வசதி, தங்கும் வசதி போன்ற வற்றிற்குக் குறைவில்லை. நினைவு- 8 : 1958 அக்டோபரில் இராய. சொ.வின் மணிவிழா. இந்து மதாபிமான சங்கத்தின் ஆதரவில் விழாவை நடத்துவதென்றும், அப்போது அவருக்குத் "தமிழ்க் கடல்' என்ற விருதை வழங்குவதென்றும் தீர்மானம் ஆயிற்று. ஏற்பாடுகள் மும்முரமாக நடை பெற்றன.அப்போது அவர் உடல் நிலையும் சற்றுக்குன்றி யிருந்தது. இதயக் கோளாறு’ என்பது மருத்துவச் சோதனையால் உறுதியாயிற்று. ம ரு ந் து. மாத்திரைகள் 岛份f6恋了覆D严T岛 உட்கொள்ளச் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டோம். இவருடைய நெருங்கிய நண்பர் (சிறைச்சாலைத் தோழர்) பல் மருத்துவர் திரு. வர்க்கீஸ் என்பார் நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ விரும்பினால் என் சொற்படிக் கேட்க வேண்டும். மணிவிழா முடியட்டும். உங்கள் பல் முழுவதை யிம் பிடுங்கி எறிய வேண்டும். பிறகு பற்சீழ்நோய்க்கு (Pyorrhoea) ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். நான் அழகாகப் பல்கட்டித் தருவேன். அதைப் போட்டுக் கொண்டு நான் சொல்லும் உணவு வகைகளை மட்டிலும் தான் உட்கொள்ள வேண்டும். எண்ணெயாலான பொருள் களை அறவே விலக்க வேண்டும். இதய நோய்க்குத் தொடர்ந்து மாத்திரைகளை விழுங்க வேண்டும்...' என்று அறிவுரை கூறினார். இராய சொ.வும் அவர் சொற்படி நடந்து கொண்டார்; மேலும் பதினாறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இக்காலத்தில் தமிழகத்தின் திசைகள் தோறும் சென்று தம் சொற்பொழிவுகளால் சைவத்தை யும் தமிழையும் பரப்பி ஒல்காப் பெரும் புகழ் பெற்றார். இக்காலத்தில் இவர் பெற்ற விருதுகள் 'சிவமணி', 'சிவம் பேருக்கும் சீலர் என்பவை.