பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 மலரும் நினைவுகள் பெற்ற சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் ஆ. இலக்குமணசாமி முதலியார் தலைமை வகித்தார். அப்போது அவர், "புதிய கல்லூரிகள் நிறுவ, செல்வப் பெருமக்கள் பலர் பொறுப்பேற்க வேண்டும்’ என்ற வேண்டுகோளைப் பேரார்வத்துடன் வெளி யிட்டார். சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் உயர் மட்டக் கல்வி உயர்ந்தோங்கியதற்கு முதற் காரண மாக இருந்தவர் இத்துணைவேந்தர். விழாக் கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த வள்ளல் அழகப்பர் எழுந் திருந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் (இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டமாக உள்ள பகுதி) கல்லூரியொன்றை நிறுவுவேன்' என்று. உரைத்தார். ஒரு திங்களுக்குள் அழகப்பா கல்லூரி' தோன்றியது. விரைவாகப் படைப்பதற்குக்காட்டுகளாகத் தேவதச்ச னான விசுவகர்மாவையும், அசுரதச்சனான மயனையும் புராணங்களில் கூறியிருப்பதைப் படித்திருக்கின்றோம். ஆயிர ஏக்கர் பரப்புக்கு மேற்பட்ட பொட்டல் காட்டை வாங்கின வேகம், கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் நிறைந்த அக் காட்டைச் சமப்படுத்தின வேகம், குறுக்கும் நெடுக்குமாகச்சாலைகள் அமைத்தவேகம், எந்தெந்தஇடத் தில் எந்தெந்தக் கல்லூரிகள், பள்ளிகள் அமைய வேண்டும் என்று போட்ட நீள் நோக்குத் திட்டம் இவையெல்லாம் நம்மை வியக்க வைக்கின்றன. இராக்கத் புல்டோசர்கள்’ பல இயங்கிக் காடுகளை அழித்து நிலத்தைச் சமப்படுத்தின. காட்சியைக் கண்ட காரைக்குடி வாசிகள் பலபட வருணித்தனர். நாகங்கள், விரியன் பாம்புகள், கீரிகள், எலிகள், நரிகள், குறு முயல்கள் முதலியவை நாலாயக்க மும் வெருவியோடின என்று கூறினர். இன்னும் பலவாறு உணர்ச்சியுடன் பேசி மகிழ்ந்தனர். அப்போது காண்டவ வனத்தை அங்கியங் கடவுள் அழித்த காட்சி நினைவிற்கு வந்தது. நான் திருச்சியில் புனித சூசையப்பர் கல்லூரியில்