பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 மலரும் நினைவுகள் கோள்ள வேண்டும். இதனைத் தெரிந்து தெளிந்த பிறகு தானே, சேய்போல் இருப்பவர் கண்டீர் மெய்ஞ்ஞானம் தெளிந்தவரே' என்று பாடி வைத்துள்ளனர் நம் பெரியவர்கள்?' இவ்வாறு இறைவனையும் நம்மையும் குழந்தை நிலைக்கு ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று கூறும் திரு. தொண்டைமான், பக்தி செய்த பக்தர்கள் சிலரின் உள்ளங்களைக் காட்டுவார். இஃது எப்படி முடியும்? அந்த உள்ளமாகிய வீணைதனில் எழுந்த நாதங்களாகிய பாடல் களைப் பார்த்தாலேபோதும்; அந்த உள்ளங்கள் நமக்குத் தெளிவாகி விடும்' என்று கூறுவார். பின்னர் கண்ணனின் குழந்தைப்பருவச் சிறுகுறும்புகளில் தம்மை மறந்து பேசு {3}j {T ff” „ உலகங்களையெல்லாம் 'பாலனாய் ஏழுலகினையும் உண்டு உமிழ்ந்த கண்ணன் ஒரு தெய்விகக் குழந்தை. குழந்தைக் கண்ணனின் திருவிளையாடல்களில் உள்ளத் தைப் பறிகொடாதவர்கள் யார்? சிறைச் சாலையில் ஒருத்தி (தேவகி) மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி (யசோதை) மகனாய் வளர்ந்த கண்ணனை - கண்ணனாகவும் கண்ணம்மாவாகவும் பாராட்டி வந்திருக் கின்றனர் பக்தர்கள். தமிழரது உணர்ச்சியையெல்லாம் தட்டி எழுப்பிய தேசிய கவிஞன் பாரதியாரும் கண்ணனை எப்படி எப்படியெல்லாம் பாராட்டுகின்றார்; போற்று கின்றார் தம்முடைய கண்ணன் பாட்டில் . இதில் ஒன்றுகண்ணம்மா-என் குழந்தை' என்ற பாட்டு-முத்தாய்ப்பு வைத்ததுபோல் அமைந்திருப்பது. கண்ணனைக் கவிஞ ருடைய தாயுள்ளம் நல்ல அழகிய சின்னஞ்சிறு குழந்தை யாகக் காண்கின்றது. பிள்ளைக் கணியமுதமாகவும் , "பேசும் பொற் சித்திரமாகவும்’, ‘அள்ளி அணைத்திடவே -ஆடி வருந் தேனாகவும் செல்வக் களஞ்சியமாகவும்: