பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总&& மலரும் நினைவுகள் கின்றார்”, என்று கூறி நம்மை ஆழ்வார்கள் காலத் திற்கே இழுத்துச் சென்று விடுவார். இப்படிப் பேசுபவர் மீண்டும் முருகனிடமே வந்து விடுவார். முருக வழிபாடு தமிழ் மக்களின் பரம்பரைச் சொத்து; அந்த வழிபாடு மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழ் மக்கள் இதயத்தைக் கொள்ளை கொண்டுள்ளது. நம்முன்னோர் இறுதியில்லாத நீலவானத்தைத்தான் நீலத் தோகை விரித்தாடும் மயில் என்று உருவகப் படுத்தினார் கள்; எங்கும் நிறைந்த கடவுள் தத்துவத்தையே முருகன் என்று உருவகப்படுத்தினார்கள். அந்த முருகனை அழகனாகக் கண்டார்கள்; குமரனாகக் கண்டார்கள்; குழந்தையாகவே கண்டார்கள்’’ என்று தம்மையே மறந்து பேசுவார். இங்ங்னம் குழந்தையுலகில் புகுந்து பேசும் திரு. தொண்டைமான் அதைவிட்டு வெளியே வர முடி யாமல் தவிப்பதைக் காணலாம். மீண்டும் தொடர்வார் : 'முருகனைப் பற்றி எண்ணும்போதெல்லாம் அவனைக் குழந்தையாகவே கருதினார்கள். அவன் சூரனையே கொன்ற பெரிய சூரனாகவே இருக்கலாம்; கடலைச் சுவற அடித்த வேலனாகவே இருக்கலாம்; மலையைப் பிளந்த மைந்தனாகவும் இருக்கலாம். வள்ளிக்கு வாய்த்த நல்ல மணாளனாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் பக்தர்களின் கண்களுக்கு அவன் சின்னஞ்சிறு பிள்ளைதான் எப்போதும். வல்வேல் முருகனை, மாலோன் மருகனை, மன்றாடி மைந்தனை அப்படிக் குழந்தை முருகனாகப் பார்ப்பதில்தான் ஓர் அழகு! அந்த அழகில் தானே பக்தர்களும் கவிஞர்களும் சொக்கி நிற்கின்றார்கள்’’ என்று கூறி தம் பேச்சுக்கு முத்தாய்ப்பாக, சின்னஞ் சிறுபிள்ளை, செங் ோட்டுப் பிள்ளை, பொன்னம் மணிப்பிள்ளை, பூலோகம்.எங்கும் புகழும்பிள்ளை,