பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A1 0 மலரும் நினைவுகள் தியானம் செய்து கொண்டு தலைமேல் குவிந்திருந்த பரத னுடைய கரங்கள் தலையிலிருந்து இரங்கிக் காதைப் பொத்திக் கொண்டன. சூடின மலர்க்கரம் சொல்லின் முன்செவி கூடின; புருவங்கள் குதித்துக் கூத்துநின்(று) ஆடின: உயிர்ப்பினொ(டு) அழற்கொ ழுந்துகள் ஓடின; உமிழ்ந்தன உதிரம் கண்களே." உள்ளத்தில் ஏற்பட்ட ஆங்காரத்தை நாடகம் போட்டுக் காட்டுகின்றன பரதனுடைய கரமும், புருவங்களும், உயிர்ப்பும், உதிரம் சிந்தும் கண்களும்' (2) மனித உறுப்புகளால் நாடக வடிவத்தில் காட்ட முடியாத மனித உணர்ச்சிகளை மிருக உறுப்புகள், பறவையின் சிறகுகள், அலகுகள், செடி கொடிகளின் ஒசிவுகளின் மூலமாக நடித்தே காட்டி விடுகின்றான் கம்பன். அதனால்தான் கம்பராமாயண நிகழ்ச்சிகள் தத்ரூபமாக (நேரில் காண்பவை போல்)-நம் கண்முன் நடப்பனபோல்-காட்சி தருகின்றன. நம் உள்ளத்தில் பதைபதைப்பு ஏற்படுகின்றது. ஆனால் எலும்புக் கோவை யால் உண்டான நம் மனித உடலைக் கொண்டு பதை பதைப்பைத் திருப்பிக் காட்ட முடியாது. நாகப் பாம்பின் வளைவு நெளிவுகள் நிறைந்த உடம்பைக் கொண்டு மனிதப் பதைபதைப்பைக் காட்டலாம். இடி விழுந்த நாகம் இப்படியும் அப்படியுமாகத் துடித்துப் புரள்வதுபோல் புரண்டு ஏங்கினாள் சீதை என்று சொல்லும்போது பதைபதைப்பு நம் கண்முன் வந்து 2. அயோத், பள்ளிப்படை-66