பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4罩爱 மலரும் நினைவுகள் இத்தகைய வருணனையெல்லாம் வால்மீகியின் சடாயுவுக்குக் கிடைக்கவில்லை. இராமலக்குவனர்கள் அவனை அரக்கனோ என்று ஐயுற்று அம்பைத் தொடுக்க முற்படுகின்றனர். உடனே வால்மீகியின் சடாயு ஒடி வந்து உங்கள் தந்தையின் நண்பன் நான்' என்று சொல்லுகின்றான். ஆனால் தசரதன் நலமா?’ என்று கூட உசாவவில்லை. வால்மீகியின் சடாயு, கம்பன் இந்தக் கட்டத்தை எப்படிக் கையாளுகின்றான்! கண்ணிர்ச் சுனை ஒன்றையல்லவா தோண்டி எடுத்து விடுகின்றான். விரைத்தடந் தாரினிர்! வேந்தர் வேந்தர் தன் வரைத்தடந் தோளினை வலியவோ?’ என்கின்றான். துறக்க முற்றான் என்று இராமன் சொல்லவும் "இரக்க முற்றான்” என ஏக்கம் எய்துகின்றான். அன்பைக் காட்டுதற்கு சடாயுவின் சிறகு கிடைத்துவிட்டது கம்பனுக்கு. என்ன பாடுபடுத்துகின்றான், பாருங்கள்! மருவினிய குணத்தவரை இருசிறகால் உறத்தழுவி மக்காள்! நீரே உரியகடன் வினையேற்கும் உதவுவீர்! உடல்இரண்டுக்கு உயிர்ஒன் ஹானான் பிரியவுந்தான் பிரியாதே இனிதி நக்கும் உடல்பொறையாம் பீழை பாரா எரியதனில் இன்றே புக்கு இறவேனேல் இத்துயரம் மறவேன்’ என்றான்." இப்படியாக உணர்ச்சி தெரிவிக்கின்ற பண்பும்(Lyrical quality) நாடகம் உணர்த்துகின்ற பண்பும் (Dramatic 5. டிெ ஆரணிய சடாயுகாண்-18 6. டிெ, டிெ-32