பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் - 425 பாங்குறு புகழ்சால் ஷேக்ஸ்பியர் பொதியில் படர்தரச் செய்தவர்; கலைச்சொல் ஈங்களித் துயர்ந்தோர் எஸ்.மக ராசர் இசையுடம் பணிகஇந் நூலே. என்ற பாடலின் மூலம், முத்தருலகில் வாழும் ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராசனுக்கு அன்புப் படையலாக்கி மகிழ் கின்றேன். நான் சென்னைக்கு வந்த பிறகு (சனவரி-1978) இவருடன் மிக நெருக்கமாகப் பழகி வந்தேன்; அடிக்கடிச் சந்தித்து பழகும் வாய்ப்புகளையும் பெற்றிருந்தேன். இரண்டு முறை டி. கே. சி. யின் வட்டத் தொட்டியில் என்னைப் பேச வைத்துப் பெருமைப் படுத்தினார். இப்பொழுது அப்பெருமகன் ஊனுடம்பில் வாழவில்லை. ஆனால் அவருடைய புகழுடம்பு இவ்வுலகில் நிலைத்து வாழ்கின்றது. என்னுடைய உள்ளத்திலும் நீங்காத அன்புடன் நிலைத்து வாழ்கின்றார்; தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த பெரியாராக வாழ்கின்றார்.