பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் 427 மட்டிலுமே மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பதவிகள் இருந்து வந்தன. தமிழ்க் காதலர் திரு தி.சு. அவினாசி லிங்கம் செட்டியார் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் (விடுதலை பெற்றவுடன்) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு திராவிட மொழி கட்கும் மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பதவிகளை உண்டாக்கினார்கள். பி.ஏ.யில் சிறப்புப் பாடங்களாகக் கற்பிக்கப்பெறும் வாய்ப்புகள் உள்ள கல்லூரிகளில் மட்டிலுமே இப்பதவிகள் இருந்து வந்தன. இதற்கு முன்னர் மண்டல மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் "பண்டிதர்கள்' (Pandits) என்றே வழங்கப் பெற்றன்ர். இவர்கள் பெற்று வந்த சம்பளமும் ஈச்சம் பழமே. ; மிகக் குறைவான சம்பளம், டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர், திரு. செல்வகேசவ முதலியார், திரு. கா. நமச்சிவ முதலியார் போன்ற பேரறிஞர்கள் யாவரும் இந்த நிலை யில்தான் இருந்தனர். பல்லாண்டுகள் இந்த மானக்கேடு தான் நிலவி வந்தது . அடுத்து, கல்வி அமைச்சராகப் பதவியேற்ற திரு. மாதவமேனன் காலத்தில் இன்னொரு திட்டம் கொண்டு. வரப்பெற்றது. அதாவது மாநிலக் கல்லூரியில் பணி யாற்றும் பேராசிரியர்கள் தலைமைப் பேராசிரியர்கள்’ என வழங்கப் பெறுதல் வேண்டும் என்றும், இவர்கள் பெறும் ஊதியமும் ரூ 500/- என்று உயர்த்தப் பெற வேண்டும் என்றும் ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு மலையாளப் பேராசிரி யருக்கு உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இத்திட்டம் அமைந்தாலும், அஃது எல்லார்க்கும் உதவுவ தாயிற்று. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஒடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை." 2. வாக்குண்டாம்-10