பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மலரும் நினைவுகள் களிலிருந்து சில மேற்கோள்களையும் காட்டியுள்ளேன். இவற்றைப் பெருக்கினால் பொதுமக்கள் சுவைப்பதற்கு இடையூறாகி விடும் என்று கருதியே மேற்கோள் கனத்தைக் குறைத்துக் கொண்டேன். தமிழ் அதிகம் நடையாடாத தேசமாகையாலே நூலுக்கு நீண்டதோர் ஆங்கில முகவுரை எழுதியுள்ளேன். தெ. பொ. மீ ; முத்தொள்ளாயிர ஆசிரியரின் காலத் தைப்பற்றி ஆய்ந்துள்ளீர்களா? உங்கள் முடிவு என்ன? நான் : காலத்தைச் சுட்டியிருக்கின்றேன்; ஆராய வில்லை. அதற்கு வேண்டிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆகவே, முடிவு ஒன்றும் செய்யவில்லை. சங்க காலத்தை அடுத்து ஏற்பட்ட நூலாக இருக்கலாம் என்பது என் ஊகம். பேட்டியின் பெரும்பாலான பொன்னான காலப்பகுதி யைத் தெ.பொ. மீ.யே ஆக்கிரமித்துக்கொண்டு விட்டார். இன்னொரு வல்லுநர் இருப்பதையே மறந்து விட்டார். இப்போது டாக்டர் மு.வ. வுக்கு வாய்ப்பு வருகின்றது. டாக்டர் மு. வ. . கம்பராமாயணம் மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? நான் : மூன்று காரணங்களை முக்கியமானவை யாகக் கருதுகின்றேன். முதலாவது : அவதார புருஷ விாகிய இராமனைக் காவிய நாயகனாகக் கொண்ட ைம . இரண்டாவது : திருக்குறள், சீவகசிந்தாமணி, ஆழ்வார் பாசுரங்கள் இவற்றை இடத்திற்கேற்றவண்ணம் கையாண் உமை. மூன்றாவது : அரசனைச் சாராமல் மக்களைச் சார்ந்து நின்று காவியம் அமைத்தமை, மக்களின் சுவைக் கேற்றவாறு கருத்துகளையும் பல்வேறு வண்ணங்களையும் ←ö} # bl ᎥTT ☾ Ꭵ_.© LI) . டாக்டர் மு. வ : பாரதியாரின் புகழுக்கும் பெருமைக் கும் காரணங்கள் கூற முடியுமா?