பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதூர் மகாவித்துவான் கி. வேங்கடசாமிரெட்டியார் 459 நான் காரைக்குடியில் பணியேற்ற பிறகுதான் இச்சந்திப்பு நிகழ்ந்தது. கம்பன் திருநாள் தொடங்கு வதற்கு ஒரு திங்களுக்கு முன்னதாகவே காரைக்குடியி லுள்ள முக்கிய தமிழாசிரியர்களாகிய பேராசிரியர் ஆ. முத்துசிவம், க. தேசிகன், பூ அமிர்தலிங்கம், அடியேன் ஆகியோர்களை அடிக்கடி சந்திக்குமாறு பணிப்பார் திரு.சா.கணேசன் அவர்கள் . இந்தக் குழுவில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவரும் தமிழ்ப்பற்று மிக்க வருமாகிய ஜகத்ரட்சகன் என்பாரும் அடங்குவார். இன்னும் கம்பனை நன்கு சுவைக்கும் அபிசீனியா நாச்சி யப்பன்,முத்துராமன்,மெ. சிதம்பரம் போன்ற நகரத்தார் இளைஞர்களும் வருவார்கள். நிகழ்ச்சிகளை அமைக்கும் முறை, அவற்றிற்குப் பொருத்தமாக யார் யாரை அழைக்கலாம் என்ற விவரங்களை எல்லாம் ஆராய்வார் சா. கணேசன். திரு ஜகத்ரட்சகன் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர். பூதூர் ரெட்டியாரை நன்கு அறிந்தவர். ஆதலால் அவரை அழைக்கலாம் என்று அவர் பெயரைப் பரிந்துரைத்து முகவரியையும் தந்தார். நானும் பூதுரர் ரெட்டியாரை நேரில் பார்த்திராவிடினும் அவர் புலமை யைப்பற்றி நன்கு கேள்வியுற்றிருந்தபடியால் திரு ஜகத்ரட்சகன் பரிந்துரைக்கு வழி மொழிந்தேன். எங்கள் பரிந்துரையை ஏற்று பூதுாராரை அழைப்பது என்ற முடிவு. ஏற்பட்டது. இது 1952 இல் நடைபெற்ற கம்பன் திருநாளுக்கு என்பதாக நினைவு. பூதூர் ரெட்டியார் கம்பன் விழாவில் கலந்து கொண்டார். நானும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரும் என்னைப் பற்றிப் பன்மொழிப்புலவர் மூலம் கேள்விப் பட்டிருந்ததாகத் தெரிவித்தார் ஒருநாள் பழகினும், பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க் கும்மே” 1. வெற்றிவே ற்கை-34