பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதுார் மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் 461 பிறகு சென்னை- இராமேசுவரம் இருப்பூர்தி மாலை ஐந்து மணிக்கு விழுப்புரத்தை அடையும். அதில்தான் நான் காரைக்குடி செல்ல வேண்டும். அது காரைக்குடியை விடியற்காலை 4 மணி சுமாருக்கு வந்து சேரும். இந்தப் பயணத்தின்போது விழுப்புரத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை காத்திருக்க வேண்டும். இந்த நிலையை விளக்கிப் பூதூர் ரெட்டியாருக்கு எழுதுவேன்விழுப்புரம் நிலையத்திற்கு வரும்படி அவர் பூதுTரில் பகலுணவை முற்பகல் 9-10க்குள் முடித்துக் கொண்டு 11-மணிக்குள் விழுப்புரம் நிலையத்திற்கு வந்து விடுவார். சுமார் 6 மணி நேரம் மேல் வகுப்பினர் காத்திருக்கும் அறையில் இலக்கியச் சல்லாபம் தான். இக்காலத்தில் ஒரு முறை வில்விபாரதத்தில் விநோத திருத்தங்கள் (1962), என்ற ஒரு சிறு நூலை எனக்கு அளித்தார்கள். இதில் வில்லிபாரதத்தில் பல திருத்தங்களைச் செய்து வில்லி புத்துாராழ்வாரைச் சைவராக்க முற்பட்ட முறைகேடுகள் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. இதிலுள்ள சில கருத்தும் ஆசிரியரின் பொது நோக்கையும், வைணவத்தில் பற்று மிக்கிருப்பினும் பிறசமயக் காழ்ப்பின்றி சமரச நோக்குடைய பண்பாட்டையும் காணமுடிகின்றது. வைணவத்திலும் சைவத்திலும் படிப்போர் உள்ளத்தை உருக்குகின்ற தோத்திரங்களும் அறிவியல் நூல்களும் (சாத்திரங்களும்) புராணங்களும் உள்ளன. இவை அவ்வச் சமயத்தினருக்கு அருமருந்தாக அமைவன. ஒரு சமயத்தார் பிற சமய நூல்களைப் பயிலவேண்டின் தம் சமய நால்களைப் பயில்வதைப் போலவே ஈடுபாட்டுடன் பயிலவேண்டும் என்றும், அந்நூல்களில் பொருள் காணு மிடத்து அச்சமயநூலோர் கருத்துக்கு மாறுபடா வண்ணம் காணுதல்வேண்டும் என்ற கொள்கையைப் பொன்னே போல் போற்றுபவர் என்பதையும் அச்சமயக் கருத்துக்கு மாறாகப் பொருள் காணலைக் கடிபவராகத்