பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 மலரும் நினைவுகள் 1 . நெடியோன்- தனித்து நின்ற நிலையில் திருமாலையே குறிக்கும். இச்சொல் உயர்ந்தோன் என்ற பொருளுடையதாய் மற்ற தெய்வங்கட்கும் அரசர்க்கும் வழங்கும். இவ்வாறு வழங்கும்போது சிறப்பு அடையுடனோ அல்லது முன் தொடர்ச்சி பற்றியோ அவர்களுள் ஒருவனைக் குறிக்குமேயல்லது தனித்து நின்ற நிலையில் அங்ங்னம் குறிக்கும் ஆற்றலுடையதன்று. முந்நீர் விழவின் நெடியோன் (புறம்-9) தேர் விசிருக்கை நெடியோன் (டிை-114) "பொலந்தார். மார்பின் நெடியோன் (மதுரைக்காஞ்சி-61) ‘நிலந்தரு திருவின் நெடியோன் (சிலம்பி 28:4) என்று பாண்டிய னையும் பாரி போன்ற அரசர்களையும் அடையுடன் நெடியோன்’ என்ற சொல்லால் குறித்தல் காணலாம். அங்ங்னமே மஞ்ஞை வெல் கொடியுயரிய....நெடியோன்’ (அகம் 149) என்றும், படுமணியானை நெடியோய்” (பரிபா, 19 : 28) என்று அடையுடனும், நெடியாய் நின்குன்றின் மிசை (டிெ. அடி. 84) என்று முன் தொடர்பு பற்றியும் கூறுவது பண்டைய வழக்கே யாகும். ஆனால், திருமாலைக் குறிக்கும்போது நெடியோன் என்ற சொல் தமிழில் அநாதியாய் அக்கடவுட்கே வழங்கும். * மால்', 'மாயோன்’ என்பவை போன்று திருநாமமாய், நிலங்கடத்தற்கு நீண்ட திரிவிக்கிரமன் என்ற பொருள். குறிக்கும் பெயராகும். நெடியோன் மார்பில் ஆரம். போல்' (சிலம்பு 25 : 84), நெடியோனன்ன நெடுங்கை’ (பெருங். 5. 4:9), நெடியவன் மூவகைப் படிவம்’ (டிெ 2. 15:19) என்று அடைகளும் முன் தொடர்ச்சிகளும் இல்லாமல் தனித்து நின்றே திருமாலைக் குறிக்கும் ஆற்றலுடையதாதலைக் காணலாம். இங்ங்ணமே இளங்கோவடிகள் கூறிய நெடியோன் குன்றமும் தொடி யோன் பெளவமும் (சிலம்பு 8 : 1) என்ற தொடரில் "நெடியோன்' என்ற பெயர் திருமாலையன்றி வேறு எவரையும் குறிக்கவில்லை என்றும் அறுதியிட்டோம். திருவேங்கடமுடையானை நெடியோன்' என்ற பெய.