பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 மலரும் நினைவுகள் வடமொழிச் சுவையைத் தென்றமிழ்ப் பயனை மாநிலம் வியப்புறப் பருகித் திடமுறு ஞானக் கொண்டலாய் வளர்ந்து சேதன ரெனும்பயிர் முளைக்கக் கடலுல குவக்க மழைபொழி அண்ணங் கரரவர் திருவடி மலரில் சுடர்மிகப் பெற்று வயங்குக என்றித் தூயநூல் சமர்ப்பணம் புரிந்தேன். என்ற பாடலின் மூலம் சமர்ப்பணம் செய்தேன். ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் அவர்களின் அணிந்துரை நூலை அலங் கரிக்கின்றது. நூல் முடிந்த சமயமும் பிரதிவாதி பயங்கரத்திற்கு சதாபிஷேகம் நடைபெறும் சமயமும் ஒன்றாக இருந்தன. (பிப்பிரவரி-மார்ச்சு 1971). சதாபிஷேகம் நடைபெறும் செய்தியை என் அருமை நண்பரும் பிரதிவாதி பயங்கரத் தின் சீடர்களில் ஒருவரும், திருவேங்கடவன் பல்கலைக் கழகக் கீழ்த்திசை ஆய்வு நிறுவனத்தில் வடமொழித் துறையில் பணியாற்றி வந்தவருமான திரு. K. சீநிவாச வரதன் மூலம் அறிந்தேன். ஆசாரிய புருஷரின் தூலத் திருமேனியை சேவித்து ஆசி பெறுவதற்கு இதுதான் தக்க சமயம் என்று கருதினேன். ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு காஞ்சி மாநகர் அடைந்தேன். ஒரு டசன் சாத்துக்குடி, ஒரு டஜன் ஆப்பிள், இரண்டு கிலோ விதை யில்லாத திராட்சை இவற்றை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு சென்றேன். மாடவீதியிலுள்ள அவர் திருமாளிகையை அடைந்து பெரிய தட்டு ஒன்றைக் கொணரச் செய்து அதில் பழங்களை வைத்துக் முகாண்டேன். 81 சீடர்கள் திவ்வியப்பிரபந்தம் சேவிக்க அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார் ஆசாரியப் பெருமகனார். என் வருகையை ஆள் மூலம் தெரி வித்தேன்.