பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் 499 என்று பெரியாழ்வார் திருவுள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டதுபோல. ' என்று பணிவாகக்கூறினேன். பேஷ், பேஷ். நல்லதொரு பாசுரத்தை நினைவு படுத்திரீைர்கள். நீடுவாழ்க’ என்று மீண்டும் ஆசி கூறினார்கள். ஒய்வு பெற்ற பிறகு (அக்டோபர். 1977) 1978 சனவரி 14 நாள் முதல் சென்னையில் குடியேறி விட்டேன். வைணவ மாநாடு நடைபெறும் பொழுதெல்லாம். (டிசம்பர்), சென்னையில் ஒரு திங்கள் ஆசாரியாரின் திருப்பாவை காலட்சேபம் நடைபெறும். அப்பொழுதெல் லாம் அப்பெருமானைச் சேவித்து ஆசி பெறுவேன். அவர் திருநாடு அலங்கரிக்கும்வரை இப்பழக்கம் நீடித்து வந்தது. 1981-அக்டோபர் 22இல் ஆசாரியப் பெருமானை ஒரு முக்கிய விஷயமாகக் காஞ்சியில் சந்திக்கக் கடிதம் எழுதிக் கேட்டேன். அதற்கு ஆசாரியார் விடுத்த பதில் : கலைக் களஞ்சியம் உயர்திரு N. ஸுப்பு ரெட்டியார் அவர்கட்கு. அன்பு மிக்க வணக்கம். உபய நலம். இன்று (20-10-81) தங்கள் அன்பார்ந்த நிரூபம் கிடைக்கப் பெற்றேன்....... நேரில் வருகையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். தை மீ” முதல் பெரும்பாலும் சயனமே சரணமாயிருக்கிறேன். வியாதி ஏதுமில்லை. 91 வயதுக்கேற்ற அசதிதான்....... அவசியம் அருள் கூர்ந்து வருக வருக. வருக-அன்பார்ந்த விதேயன் P. B. அண்ணங்கராசாரியர். காஞ்சி சென்று என் பணியையும் முடித்துக் கொண்டேன். அவருடைய ஆசியையும் உளங்குளிரப் பெற்றேன். அப்பொழுது ஆசாரியப் பெருமானிடம் கூறினேன் : 'சுவாமி, தங்கட்குப் பிறகு வைணவ உலகத்தை எழுத் தாலும் பேச்சாலும் கட்டிக் காக்க ஒருவரைத் தயார் செய்யவில்லை. கோடி சூரிய பிரகாசமாக ஒளி விட்டுத் திகழ்ந்து வந்த தங்கட்குப் பிறகு தமிழகமெங்கும் சிறு சிறு