பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப்புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் 39 டிருந்தேன். குடும்பத்துடன் இவர்தம் திருமடத்தில் நான்கு நாட்கள் தங்கிக் காஞ்சியிலும் அதனைச் சுற்றிலு: முள்ள பதினான்கு திவ்விய தேசங்களைச் சேவித்தது இப்போது நினைவிற்கு வருகின்றது. நான் வித்துவான் தேர்வுக்குப் படிப்பதற்காகத் துறையூரிலிருந்து வந்த நாட்கள் டிசம்பர்-சனவரியில். பனிக் காலமாகையால் நம் புலவர் பெருமான் ஆஸ்த்துமா நோயால் மிகவும் தொல்லைப்படுவார். இவரை விடாமல் பிடித்துக் கொண்டு தொல்லை தந்த நோய்கள் இரண்டு. ஒன்று ஆஸ்த்துமா; மற்றொன்று மூல நோய். இரண்டாவது நோய் பெரும்பாலான வைணவர்களின் பரம்பரரைச் சொத்துபோல் காணப்படும்! ஆஸ்த்து மாவுக்கு வெப்பம் தரும் மருந்தும் மூல நோய்க்கு தண்மை தரும் மருந்தும் சாப்பிடவேண்டிவரும், ஆஸ்த்து மாவிற்குச் சாப்பிடும் மருந்து மூல நோயைக் கிளம்பி விடும். மூல நோய்க்குச் சாப்பிடும் மருந்து ஆஸ்த்துமாவை மிகுவிக்கும். இவ்வாறு இரண்டு நோய்களும் இருதலைக் கொள்ளிபோல் இவரைத்தாக்கி வருத்தும்; இவர் இடையில் அகப்பட்ட எறும்புபோல் தவிப்பார். யானும் இவர் நிலையைக் கண்டு துன்புறுவேன். நமக்கு மிகவும் வேண்டப்படுவோர் படும் துன்பம் நம்மையும் தொற்று நோய்போல் பற்றுவது நம் அநுபவம் அல்லவா? பிராரத்தம்தான் (நுகர்வினைதான்) இவரைத் துன்புறுத்துவதற்குக் காரணமாக இருந்தது போலும் என்று இப்போது என் மனம் எண்ணு கின்றது. ஏனெனில் அக்காலத்தில் சமய அறிவும் தத்துவ ஆராய்ச்சியும் என்னிடம் ஏற்படவில்லை. நூல் படையல் : நான் துறையூரில் தமிழன்னையின் மடியில் கிடந்து தமிழ்த்தேனை மாந்தியபோது எனக்குக் கிடைத்த அதுபவத்தை என் கன்னி முயற்சியாக சுமார் இருபத்தைந்து கட்டுரைகளாக வடித்தேன்: இவற்றுள்